வெள்ளி, 22 ஜூன், 2012

namadhu katchi

நமது கட்சி
தமிழ்நாடு மார்க்சிய லெனினியக் கட்சி - தநாமாலெக

1. கம்யுனிஸ்டு அகிலமும் அதன் வழிகாட்டுதல்களும்
    பின்தங்கிய கீழ்திசை நாடுகளின் புரட்சி பற்றிய வழிகாட்டும் கோட்பாடுகளைத் தெளிவாக முன்வைத்த பேராயத்தை (காங்கிரஸை) மாஸ்கோவில் கூட்டியது.  இரண்டாவது அகிலம் சந்தர்ப்பவாதச் சேற்றில் சிக்கிக் கொண்டதை அடுத்து மாபெரும் ருஷ்ய புரட்சியை வழிநடத்திய தலைவர் தோழர் லெனின் தலைமையில் மூன்றாவது அகிலம் தொடங்கியது.
முதல் அகிலம் (1864 - 76)
    மார்க்சியத்தின் மூலவர்களான மார்க்கம், எங்கல்கம் முதலாவது அகிலத்தை நிறுவுவதற்கு முன்பாக 'கம்யுனிஸ்ட் லீக் ஆப் தி ஜஸடிஸ்' ஆகிய அமைப்புகளை நிறுவினர்.  'கம்யுனிஸ்ட் லீக் அடக்கு முறைகளினாலும், 'லீக் ஆப் தி ஜஸடிஸ்' பல்வேறு முரண்பட்ட கருத்துகளினாலும் வீழ்ச்சி அடைந்தன.  இதை அடுத்து ஜர்மன், பிரஞ்சு, பிரிட்டிஷ் ஆகிய நாடுகளில் சிதறிக் கிடந்த தொழிலாளர்கள் இயக்கங்களை ஒன்றிணைத்து வழிகாட்டுவதற்காக 'சர்வதேச உழைப்பாளிகள் சங்கத்தை' ஏற்படுத்தினர்.  இதுதான் முதலாவது அகிலம் என்று அழைக்கப்படுகிறது.
    முதலாவது அகிலத்தில் தொழிலாளர் பிரதிநிதிகளைக் கொண்ட பல்வேறு அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், கலாச்சாரக் கழகங்கள், கூட்டுறவுக் கழகங்கள், சேமநல அமைப்புகள் என பல்வேறு அமைப்புகள் இணைந்திருந்தன.  இவர்களிடமிருந்த ஒற்றுமை, இவர்கள் அனைவரும் முதலாளித்துவத்தை அடியோடு வெறுத்தனர்.  புரட்சிகர எண்ணம் கொண்டிருந்தனர் என்பதாகும்.  ஆனால் அவர்களுடைய பாதைகள் வேறுபட்டிருந்தன.
    முதலாவது அகிலத்தில் மார்க்சுக்கும், எங்கல்சுக்கும் விஞ்ஞானப்புர்வமான கருத்துகளைப் பரப்புவதே பிரதான பணியாக இருந்தது.  அதில் ஒரு பகுதியாக அகிலத்தினுள் எழுந்த தவறான கருத்துகளை எதிர்த்துப் போராடினர்.  தொழிலாளி வர்க்கத்துக்கு ஒரு தத்துவமும் அதற்கென ஓர் அமைப்பும் வேண்டும்.  கூடவே அந்த அமைப்பு தேசியத் தன்மை கொண்டிருப்பதுடன் சர்வதேசியத் தன்மையும் கொண்டிருக்க வேண்டும் என்பதை அவர்கள் வலியுறுத்தினர்.  இந்த அடிப்படையில் தொழிலாளி வர்க்க இயக்கத்தில் எழுந்த பல்வேறு தவறான போக்குகளையும் எதிர்த்துப் போராடி விஞ்ஞானப்புர்வமான பாட்டாளி வர்க்கக் கருத்துகளை நிலைநாட்டினர்.
    உதாரணமாக தொழிலாளிகள் தங்கள் நிலையை உயர்த்திக் கொள்ள தொழிற்சங்கங்களை அமைத்து தங்களுடைய அன்றாடப் பொருளாதாரக் கோரிக்கைகளுக்காகப் போராடினாலே போதும் என்ற தொழிற்சங்கவாதத்தை எதிர்த்துப் போராடினர்.  தொழிலாளி வர்க்கம் தனது அன்றாடப் பொருளாதாரக் கோரிக்கைகளுக்காக மட்டுமின்றி அரசியல் அதிகாரத்திற்காகவும் போராட வேண்டும்.  பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும்போது மட்டும்தான் தனி உடைமையை ஒழித்து பொது உடைமையை ஏற்படுத்தி அனைத்து சுரண்டலையும் ஒழிக்க முடியும் என்பதைத் தெளிவுபடுத்தினர்.
    அடுத்து, முதலாளித்துவத்தின் மீது தீராத வெறுப்புக் கொண்ட லூயி பிளாங்கு என்பவர் முன்வைத்த குட்டி முதலாளித்துவ தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடினர்.  இவர்கள் (பிளாங்கிஸ்ட்கள்) முதலாளித்துவத்தை ஒழித்துக்கட்டி சோசலிசத்தை நிறுவுவதற்கு மக்கள் திரள் போராட்டங்களையும், தொழிலாளி வர்க்கத்தின் அமைப்பு ரீதியான புரட்சிப் போராட்டங்களையும் நம்பவில்லை.  மாறாக, தனிநபர் குழுக்கள் திடீர்ப் புரட்சி நடத்தி அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்றனர்.  சோசலிச நிர்மானம் ஏதோ ஒருநாளைய நிகழ்ச்சி இல்லை: அது தொடர்ந்து நடைபெறும் ஒரு செயல்: சமுதாயத்தின் எல்லா அம்சங்களையும் மாற்றி அமைப்பது: தொடர்ந்த ஒரு நிகழ்ச்சிக் கோவை என்பதை இவர்கள் உணரவில்லை.  தொழிலாளி வர்க்கத்துக்கு தீங்கு விளைவித்த இந்த இடதுசாரி தீவிரவாதம் பிளாங்கியம் எனப்பட்டது.
    அடுத்து, பிரொவ்தான் என்பவரால் முன்வைக்கப்பட்ட குட்டி முதலாளிய அராஜகவாதத்தை (பிரெளதானியம்) எதிர்த்துப் போராடினர்.  பிரெளதானியம், சதிகளிலும், திடீர்ப் புரட்சிகளிலும் நம்பிக்கை வைக்கவில்லை.  முதலாளித்துவத்துக்கு குழிபறிக்க ஒரே வழி கூட்டுறவுதான் என வாதிட்டது.  சமூகமே ஒரு கூட்டுறவாகச் செயல்படும் என்றும், அரசே இருக்காது என்றும் பிரெளதானியர்கள் கூறினர்.  பாட்டாளி  வர்க்கத்தின் அரசு இல்லாமல் முதலாளித்துவ சமுதாயத்தை அரசியல், பொருளாதார அமைப்பை-ஒழிக்கவோ சோசலிசத்தை நிலைநாட்டவோ முடியாது என்பதை பிரெளதானியம் ஏற்றுக் கொள்ளவில்லை.  எனவே, பிரெளதானியம் சாராம்சத்தில் முதலாளித்துவப் பாதுகாப்புக் கொள்கையே என்பதை மார்க்சியம் அம்பலப்படுத்தியது.
    அடுத்து, பக்குனின் என்பவர் முதலாளித்துவத்தை ஒழித்துக் கட்டுவதில் தீவிர ஆர்வங்கொண்டிருந்தார்.  ஆனால் அதற்கு மக்கள் திரள் அமைப்புகளும், தொழிற்சங்கங்களும் அவசியம் என அவர் கருதவில்லை.  இன்னும் சொன்னால் எவ்வித அமைப்பும் தேவை இல்லை என்பது அவருடைய கருத்து.  சிறு சிறு குழுக்கள் திடீர் புரட்சி நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் முதலாளித்துவத்தை ஒழிக்க வேண்டும் என்பது அவருடைய கொள்கை.  மொத்தத்தில் சமுதாயப் புரட்சியின் தன்மையைப் புரிந்து கொள்ளாத இவர் வெறும் வெறுப்பையும் திடீர் நடவடிக்கைகளையும் அடிப்படையாகக் கொண்டு எல்லாவற்றையும் சாதித்து விடலாம் என்று கருதினார்.  அழிவு வேலையை மட்டுமே கொண்டிருந்த பக்குனின் அராஜகவாதத்தையும், மார்க்சிய மூலவர்கள் எதிர்த்துப் போராடினர்.
    விஞ்ஞான சோசலிசக் கருத்துகளைப் பரப்பியதில் முதலாவது அகிலம் மகத்தான சாதனை நிகழ்த்தியது.  நவீனகால தொழிலாளி வர்க்க இயக்கத்திற்கு கொள்கையையும், அமைப்பு வடிவத்தையும் வகுத்துக் கொடுத்தது.  தொழிலாளர் அமைப்புகளின் பாத்திரத்தை எடுத்துக்காட்டி விவசாயிகளுடன் கூட்டணி, யுத்தம், தேசிய இனப் பிரச்சினை, உடனடி பிரச்சினைகளும் ஜனநாயகமும், தொழிலாளி வர்க்க சர்வாதிகாரம் ஆகியவற்றுக்கு வழிகாட்டியாக மார்க்சியத் தலைமை உருவாவதற்கு வழி வகுத்தது.  இவ்வாறு பல்வேறு சாதனைகளுக்கிடையில் அதி தீவிரவாதிகளால் முதலாவது அகிலம் செயல்படாமல் முடமாக்கப்பட்டதால் 1876ல் அது கலைக்கப்பட்டது.

இரண்டாவது அகிலம் (1889 - 1914)
    1889ல் இரண்டாவது அகிலத்தின் முதல் காங்கிரஸ் பாரிசில் நடைபெற்றது.  இந்த ஆரம்ப மாநாட்டில் சீர்திருத்தவாதிகள் பங்கு கொள்ள மறுத்து இங்கிலாந்தில் தனியாக ஒரு மாநாட்டைக் கூட்டினர்.  இந்த அகிலம் அராஜகவாதிகளை 1896ல் முற்றாக வெளியேற்றியது.  மே தினத்தை சர்வதேச தொழிலாளர் தினமாகப் பிரகடனப்படுத்தியது .  ஆனால் இரண்டாவது அகிலம் ஓர் அமைப்பாக இயங்கவில்லை. அவ்வப்போது கூட்டங்கள், மாநாடுகள் என்ற முறையிலேயே செயல்பட்டது.  இதனால் அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஓர் அமைப்பு வடிவம், தலைமை. ஒழுங்கு விதிகள், கட்டுப்பாடு, பொதுத்திட்டம் எதவும் இல்லை.  இதில் பங்கு கொண்ட பல்வேறு அமைப்புகளும் சர்வதேசியத் தன்மையைவிட தேசியத் தன்மை மிகுந்தவையாக, சுதந்திரமானவையாக இருந்தன.  எல்லா அமைப்புகளும் ஒரே மாதிரியான நடைமுறையை மேற்கொள்ளவில்லை.
    இக்கட்டத்தில் முதலாளித்துவம் வேகமாக வளர்ந்து ஏகாதிபத்திய கட்டத்தை அடைந்தது.  ஏகாதிபத்தியம் பலமாக இருந்ததுடன் அதிக சுரண்டல், காலனிக் கொள்ளை ஆகியவற்றின் மூலம் உள்றாட்டுத் தொழிலாளிகளுக்கு அதிக சலுகை கொடுத்து தொழிலாளிகளில் ஒரு பகுதியினரையே சலுகை பெற்ற ஒரு பிரிவாக பிரித்து வைத்தது.  முதலாளித்துவ வளர்ச்சியின் காரணமாக சட்டப் புர்வமாக, சமரசத்தின் மூலம் தொழிலாளிகளுக்கு சலுகைகளை வாங்கி்க கொடுத்த தொழிற்சங்கவாதிகளும் 'சலுகை பெற்ற' ஆதிக்க வர்க்கக் கூட்டமாக மாறினர்.  இவர்கள் உடனடி கோரிக்கைகளின் அனுகூலங்களில் மட்டுமே கவனம் செலுத்தினர்.  இந்தப் பின்னணியில் முதலாளித்துவம் சலுகைகள் அளிக்க முன்வந்ததால் 'வர்க்கப் போராட்டம் அவசியமில்லை, முதலாளித்துவத்தின் தன்மை மாறிவிட்டது.  சமரசப் பாதையே தொழிலாளி வர்க்கத்தின் முன்னேற்றப்பாதை' என்றும் 'இறுதி லட்சியமான அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவது அவசியமில்லை, சமாதானப் பாதையில் இன்றைய ஜனநாயகம் அதற்கு வழிசெய்கிறது.  எனவே ஜனநாய அரசியல் அமைப்பு வர்க்கப் போராட்டங்கள் அவசியமில்லாத வர்க்கப் போராட்டங்களுக்கு அப்பாற்பட்ட ஓர் அமைப்பாக மாறிவிட்டது' என்றும், தொழிலாளி வர்க்க சர்வாதிகாரமும் வர்க்கப் போராட்டமும் இன்றியே சோசலிசத்தை படிப்படியாக அடைய முடியும்' என்றும், இருக்கும் ஜனநாயக அமைப்பை பய்னபடுத்தி தொழிலாளி வர்க்கம் தனது வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்வதே சரியான வழி என்றும் சிலர் வாதிட்டனர்.  இந்தப் போக்கின் பிரதிநிதியாக செர்மன் நாட்டைச் சேர்ந்த பெர்ன்ஸ்டீபன் இருந்தார்.
    இரண்டாவது அகிலம், அராஜகவாதிகளை வெளியேற்றியது போல் மேற்கண்ட சீர்திருத்தவாதிகளை வெளியேற்றவில்லை.  தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமை என்ற பெயரால் இந்தச் சீர்திருத்தவாதிகளின் சீர்குலைவுப் பணிகளுக்கும், வர்க்க சமரசப் போதனைகளுக்கும் இடமளிக்கப்பட்டது.  ஆனால், லெனின் ரஷ்யாவில் இத்தகைய போக்குடையவர்களைக் கட்சியிலிருந்து வெளியேற்றினார்.  மற்றவர்கள் இந்தப் போக்கினால் வரும் ஆபத்தை உணராமல் ஒற்றுமையின் பெயரால், சீர்குலைவைத் தவிர்ப்பதன் பெயரால் இந்தக் கூட்டத்தை வளரவிட்டனர்.
    இரண்டாவது அகிலம், படைக்குறைப்பு, யுத்தநிதி மறுப்பு, தொழிலாளி வர்க்க சர்வதேசியம் போன்ற சோசலிசத் தீர்மானங்களை 1912லேயே பேசல் மாநாட்டில் நிறைவேற்றியிருந்த போதிலும் 1914ல் அய்ரோப்பாவில் யுத்த மேகங்கள் திரண்டபோது இந்த சமூக சனநாயக சீர்திருத்தவாத சட்டமன்ற உறுப்பினர்கள் யுத்தநிதி ஒதுக்கீட்டிற்கு ஆதரவளித்தனர்.  'தாய்நாட்டைப் பாதுகாப்பது' என்ற பெயரால் யுத்த முயற்சிகளுக்கு ஆதரவளித்தனர்.  முதலாவது உலகப் போர் மூண்டபோது அதற்கு ஆதரவாக தொழிலாளி வர்க்கத்தைத் திரட்டி ஏகாதிபத்திய உலகப் போரில் முதலாளி வர்க்கத்துக்குப் பலிகடாவாக்கினர்.  இதனால் இரண்டாவது அகிலம் சவக் குழியில் புதையுண்டது.
    சமூக சீர்திருத்தவாதிகளின் கொள்கை அவர்களையே ஒருவருக்கொருவர் எதிரியாக்கி தத்தம் நாட்டு முதலாளிகளின் சார்பாளர்களாக்கிவிட்டது.  தொழிலாளி வர்க்க சர்வதேசியம் கைவிடப்பட்டது.  உலகப் போர் மூண்டு ஏகாதிபத்தியம் நெருக்கடியில் சிக்கியபோது தொழிலாளி வர்க்கப் புரட்சி வெடிக்காமல் சமூக சனநாயகவாதிகள் துரோகம் செய்தனர்.
    இரண்டாவது அகிலத்தைச் சேர்ந்த சமூக சனநாயகவாதிகள், சீர்திருத்தவாதிகள், வர்க்க சமரசவாதிகள், சந்தர்ப்பவாதிகள் ஆகியோரை எதிர்த்து லெனின் தீவிரமாகப் போராடினார்.  தொழிலாளி  வர்க்க சர்வதேசியத்தை உயர்த்திப் பிடித்தார்.  ஏகாதிபத்தியப் போரை உள்நாட்டுப் போராக மாற்ற வேண்டும் என்ற முழக்கத்தை முன்வைத்தார்.  விஞ்ஞான சோசலிஸ்டுகளான சர்வதேசியவாதிகளை ஒன்றுதிரட்ட முயன்றார்.  'சந்தர்ப்பவாதமும் இரண்டாவது அகிலத்தின் வீழ்ச்சியும்', 'அய்ரோப்பிய தொழிலாளர் வர்க்க வேறுபாடுகள்', 'தாய்நாட்டில் பாதுகாப்பிற்காக' முதலான கட்டுரைகள் மூலம் 'தாய்நாட்டைக் காப்போம்' என்ற இரண்டாவது அகில சந்தர்ப்பவாதிகளை அம்பலப்படுத்தினார்.

மூண்றாவது அகிலம் (1919)
    இரண்டாவது அகிலத்தின் வீழ்ச்சியை அடுத்து 'ஏப்ரல் ஆய்வுரைகள்' மூலம் மூன்றாவது அகிலத்திற்கான அறைகூவலை லெனின் விடுத்தார்.  மூன்றாவது கம்யுனிஸ்ட் அகிலம் 1919 மார்ச்சில் மாஸ்கோவில் கூடியது.  அது "புதிய சகாப்தம் ஏகாதிபத்தியம் சீரழிந்து தொழிலாளி வர்க்கப் புரட்சிக் காலகட்டம் உதயமாகிவிட்டது" என பிரகடனப் படுத்தியது.  சனநாயக மத்தியத்துவத்தையும், பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தையும் தனது அமைப்புக் கோட்பாடாக ஏற்றுக் கொண்டது.  லெனின் வகுத்த கோட்பாடுகளும், செயலுத்திகளும் அகிலத்தில் புரட்சிகரமான வழிகாட்டுதலுக்கு அடிப்படையாய் இருந்தன.
    அகிலத்தின் முதல் மாநாடு காலனி விடுதலைப் போராட்டத்திற்கு முழு ஆதரவு தெரிவித்து முதலாளிய சனநாயகத்துக்கு எதிராக தொழிலாளி வர்க்க சர்வாதிகாரத்தை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் தொழிலாளி வர்க்கத்தின் முன்னணிப் பாத்திரத்தையும் வலியுறுத்தியது.  வலது சந்தர்ப்பவாதத்தை முறியடிக்காமல் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிலை நாட்டமுடியாது.  அதே போல் இடது சாரி தீவிரவாதத்தை முறியடிக்காமல் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கு புரட்சிப் பாதையில் வழிநடத்த மக்களைத் திரட்ட முழயாது:  பாட்டாளி வர்க்க சர்வதேசியம் என்பகு புரட்சிக்கு அடிப்படை: முதலாளியம் சர்வதேசியத் தன்மை பெற்றிருக்கும்போது தொழிலாளி வர்க்கம் குறுகிய தேசியவாதத்தைக் கொண்டிருக்குமானால் அது சீர்திருத்தவாத சகதியில் தள்ளிவிடும் என்பதை மாநாடு சுட்டிக் காட்டியது.
    1920 ஜுலையில் கூடிய அகிலத்தின் இரண்டாவது காங்கிரஸ் அகிலத்தின் அங்கத்தினர்களுக்கு 19 அம்ச நிபந்தனைகளை விதித்தது.  இந்த 19 அம்சங்களில் கம்யுனிஸ்ட் அகிலத்தின் தத்துவார்த்த நிலைப்பாடுகள், அமைப்புக் கோட்பாடுகள், நடைமுறை உத்திகள் ஆகியவை அடங்கியுள்ளன.
    இப்பேராயத்தில் (1920, ஜுலை 26) தேசிய மற்றும் காலனி பிரச்சினைகள் ப்றறி லெனின் ஆற்றிய உரை பின்தங்கிய கீழ் திசை நாடுகளின் புரட்சி பற்றிய ஒரு சரியான கண்ணோட்டத்தை முன் வைத்தது.  பாட்டாளி வர்க்க இயக்கம் இந்நாடுகளில் விவசாயிகள் இயக்கங்களுடன் கொள்ள வேண்டிய உறவு, முதலாளிய வர்க்கங்களுடன் கொள்ளவேண்டிய உறவு, விவசாயிகளின் சோவியத்துகளின் முக்கியத்துவம், போராட்ட வீரர்களின் சுயேச்சையாக படைப் பிரிவு மற்றும் கட்சி நிறுவனங்களின் அவசியம் ஆகியவை பற்றி இவ்வுரை தெளிவுபடுத்தியது.

அவ்வுரையின் தோழர் லெனின் குறிப்பிட்டார்:
    "எந்த தேசிய இயக்கமும் முதலாளித்துவ சனநாயக இயக்கமாகவேதான் இருக்க முடியும் என்பதில் சந்தேகம் இல்லை.  ஏனெனில் பிற்பட்ட நாடுகளில் மிகப்பெருவாரியான மக்கள் முதலாளிய உறவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விவசாயிகளாவர்.  இந்த பிற்பட்ட நாடுகளில் பாட்டாளி வர்க்ககக் கட்சிகள் அவை இந்நாடுகளில் உதித்தெழ முடியுமாயின் விவசாயி இயக்கத்துடன் உறுதியான உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளாமலும் அதற்குப் பயனுள்ள முறையில் ஆதரவு அளிக்காமலும் கம்யுனிஸ்ட் செயலுத்தியையும், கம்யுனிஸ்ட் கொள்கையையும் பின்பற்ற முடியும் என நினைப்பது கற்பனைவாதமேயாகும்.
    "ஏகாதிபத்திய முதலாளி வர்க்கம் ஒடுக்கப்பட்ட தேசங்களிலும் கூட சீர்திருத்தவாத இயக்கத்தைத் தோற்றுவிப்பதற்காகத் தன் சக்திக்கு இயன்றது அனைத்தையும் செய்து வருகிறது.  சுரண்டும் நாடுகளுடைய முதலாளிய வர்க்கத்துக்கும் காலனிகளில் உள்ள முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இடையே ஒருவித இணக்கம் ஏற்பட்டுள்ளதன் பயனாய் அடிக்கடி மிகப் பல சந்தர்ப்பங்களில் என்று கூட சொல்லலாம்.  ஒடுக்கப்பட்ட நாடுகளுடைய முதலாளிவர்க்கம் தேசிய இயக்கத்துக்கு நிச்சயமாய் ஆதரவாய் இருக்கும் அதே நேரத்தில் புரட்சிகரமான எல்லா இயக்கங்களுக்கும் புரட்சிகர வர்க்கங்களுக்கும் எதிரான போராட்டத்தில் ஏகாதிபத்திய முதலாளிய வர்க்கத்துடன் முழு இசைவுடையதாகி விடுகிறது.  அதாவது அதனுடன் சேர்ந்து கொண்டு விடுகிறது.  மறுக்க முடியாவதாறு இது கமிஷனில் நிருபிக்கப்பட்டது.  இந்தப் பாகுபாட்டைக் கணக்கில் எடுத்து அனேகமாய் எல்லா சந்தர்ப்பங்கிளலும் "முதலாளிய சனநாயக" என்ற தொடருக்கு பதிலாக "தேசிய புரட்சிகர" என்னும் தொடரைக் கையாளுவது தான் சரியான ஒரே வழியாகும் என்று தீர்மானித்தோம்.  இந்த மாற்றத்தின் தனி முக்கியத்துவம் யாதெனில் இயக்கங்கள் மெய்யாகவே புரட்சிகரமானவையாகவும், விவசாயிகளையும் ஒடுக்கப்பட்ட மக்கள் திரளையும் புரட்சிகர மனப்பாங்குடையோர் ஆகும்படி போதமளிப்பதற்கும், இடையுறாய் இல்லாமல் இருக்கும் போதும் மட்டுமே அவற்றை ஆதரிக்க வேண்டும்.  ஆதரிக்கவும் செய்வர்.  இந்த நிலைமைகள் இல்லையேல் இந்நாடுகளில் கம்யுனிஸ்டுகள் சீர்திருத்தவாத முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்துப் போராட வேண்டும்".

    "சோவியத்துகள் மூலமான ஒழுங்கமைப்பு என்னும் கருத்து எளிமையான ஒன்று, பாட்டாளி வர்க்க உறவுகளில் மட:மின்றி விவசாயிகளின் நிலப்பிரப்புத்துவ, அரை     நிலப்பிரபுத்துவ எறவுகளிலும் டிசயல்படுத்தப்படக் வுடியதே.  இத்துறையில் எங்களுக்கு அனுபவம் இன்னமும் கணிசமானதாய் இல்லை.  ஆனால் கமிஷனில் நடைபெற்ற விவாதத்தில் காலனி நாடுகளைச் சேர்ந்த பல பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.  விவசாயிகளின் சோவித்துகள், சுரண்டப்படுவோரின் சோவியத்துகள் முதலாளிய நாடுகளில் மட்டுமல்லாது முதலாளித்துக்கு முந்தைய உறவுகளைக் கொண்ட நாடுகளிலும் கையாளப்படக்கூடிய ஆயுதமே என்பதையும் பிற்பட்டவையான காலனி நாடுகளும் அடங்கலாய் எங்கும் விவசாயிகளின் சோவித்துகளுக்கு ஆதரவாய் பிரச்சாரம் நடத்துவது கம்யுனிஸ்டு கட்சிகளுக்கும், கம்யுனிஸ்டு கட்சிகளை நிறுவத் தயாராக உள்ள கூறுகளுக்கும் உரித்தான முழுமுதற் கடமையாகும் என்பதையும் கம்யுனிஸ்டு அகிலத்தின் விரிவுரைகள் குறிப்பிட வேண்டும் என்பதை இந்த விவாதம் அய்யமற தெளிவுபடுத்திற்று.  எங்கெல்லாம் நிலைமைகள் அனுமதிக்கின்றனவோ அங்கெல்லாம் அவை உழைப்பாளி மக்கள் சோவியத்துகளை நிறுவ முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்".
    "தற்போது விடுதலைப் பாதையில் அடி வைத்திருக்கின்ற, யுத்தத்துக்குப் பின் முன்னேற்றத்தை நோக்கி ஓரளவு வளர்ச்சி காண்கிற பிற்பட்ட தேசங்களுக்கு முதலாளிய வளர்ச்சி கட்டம் தவிர்க்க முழயாததா? நாங்கள் எதிர்மறையில் பதிலளித்தோம்.  வெற்றி பெற்ற புரட்சிகர பாட்டாளி வர்க்கம் அவர்களிடையே இடைவிடாது பிரச்சாரம் நடத்துமாயின், சோவியத் அரசாங்கங்கள் தம் கையில் உள்ள எல்லா சாதனங்களையும் கொண்டு அவர்களுக்கு உதவி புரியுமாயின் பின்தங்கிய நிலையில் உள்ள தேசங்கள் முதலாளிய வளர்ச்சிக் கட்டத்துள் தவிர்க்க முடியாதபடி போயாக வேண்டும் எனக் கொள்வது அப்போது தவறாகிவிடும்."
    "காலனிகளிலும் பிற்பட்ட நாடுகளிலும் நாம் போராட்ட வீரர்களது சுயேச்சையான படைப் பிரிவுகளையும், கட்சி நிறுவனங்களையும் தோற்றுவிக்க வேண்டும என்பது மட்டுமன்றி, விவசாயிகளது சோவியத்துகளை நிறுவி அவற்றை முதலாளியத்துக்கு முந்திய நிலைமைகளுக்கு தகவமைக்க முயலுவதற்கான பிரச்சாரத்தை உடனடியாத் துவக்க வேண்டும் என்பது மட்டுமின்றி, முன்னேறிய நாடுகளின் பாட்டாளி வர்க்கத்தின் கட்டங்களைத் தாண்டி முதலாளிய கட்டத்தினுள் செல்ல வேண்டிய அவசியமில்லாமலே சோவியத் அமைப்புக்கும், கம்யுனிசத்துக்கும் மாறிச் செல்ல முடியும் என்ற நிர்ணயிப்பையும் கம்யுனிஸ்டு அகிலம் தக்க தத்துவார்த்த அடிப்படையுடன் முன்வைக்க வேண்டும்."
    "இப்படி மாறிச் செல்வதற்கான வழிவகைகளை முன்கூட்டியே சுட்டிக் காட்டுவது சாத்தியமல்ல.  நடைமுறை அனுபவம் இவற்றைப் புலப்படுத்தும்.  ஆனால் மிகவும் தொலைதூரத் தேசங்களில் கூட உழைப்பாளி மக்கள் திரளுக்கு சோவியத்துகள் என்னும் கருத்து உயிரனையதாகிவிட்டது என்பதும், முதலாளித்துவத்துக்கு முந்திய சமுதாய அமைப்புக்குரிய நிலைமைகளுக்கு சோவியத்துகளை தகவமைத்திட வேண்டும் என்பதும் எலகின் எல்லாப் பகுதிகளிலும் கம்யுனிஸ்டு கட்சிகள் இத்திசையில் உடனே வேலையைத் தொடங்க வேண்டும் என்பதும் திட்டவட்டமாய் நிலைநாட்டப்பட்டிருக்கின்றன."

இவற்றின் சாராம்சம் கீழ்க்கண்டவையாகும்:
1. பின்தங்கிய நாடுகளில் பாட்டாளி வர்க்கம் விவசாயிகள் இயக்கத்துடன் உறுதியான உறவேற்படுத்திக் கொள்ளாமல் கம்யுனிஸ்டு செயலுத்திகளையும், கம்யுனிஸ்டு கொள்கைகளையும் பின்பற்ற முடியாது.
2. இந்நாடுகளில் உள்ள முதலாளி வர்க்கம் (சீர்திருத்தவாத) ஏகாதிபத்திய முதலாளிவர்க்கத்திலிருந்து வேறுபட்டிருப்பினும், தேசிய இயக்கத்துக்கு ஆதரவாய் இருப்பினும் புரட்சிகர இயக்கங்களுக்கும், வர்க்கங்களுக்கும் எதிராக ஏகாதிபத்தியத்துடன் சேர்ந்து கொண்டு விடுகிறது.  முதலாளித்துவ விடுதலை இயக்கங்கள் உண்மையாகவே புரட்சிகரமானதாகவும் கம்யுனிஸ்டு பணிக்கு இடையுறாக இல்லாமலும் இருக்கும் நிலைமைகளில் தவிர சீர்திருத்தவாத முதலாளி வர்க்கத்தை எதிர்த்துப் போராட வேண்டும்.
3. பின்தங்கிய நாடுகளிலும் விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்களின் சோவியத்துகளுக்காப் பிரச்சாரம் செய்ய வேண்டும்.  நிலைமைகள் அனுமதிக்கும் போது சோவியத்துகளை நிறுவ முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
4. கம்யுனிஸ்டுகள் போராட்ட வீரர்களின் சுயேச்சையான படைப் பிரிவுகளையும், கட்சி நிறுவனங்களையும் நிறுவ வேண்டும்.  விவசாயிகளது சோவியத்துகளை நிறுவி அவற்றை முதலாளியத்துக்கு முந்திய நிலைமைகளுக்கு தகவமைக்க பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும்.
    மேலும் 1922ல் கூடிய கம்யுனிஸ்டு அகிலத்தின் 4வது காங்கிரஸ் தொழிலாளி வர்க்க சர்வாதிகாரத்துக்கு முன்னோடியாக தொழிலாளிகள் விவசாயிகளின் கூட்டு அரசு அயைம முடியும் என்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டியது.
    பின்தங்கிய கீழ்திசை நாடுகளின் புரட்சிக்கு தோழர் லெனினும், கம்யுனிஸ்டு அகிலமும் அளித்த மதிப்புமிக்க வழிகாட்டுதல்களின் சரியான தன்மையை சீனப் புரட்சியின் வெற்றியும், வியட்நாம், கொரியா போன்ற நாடுகளில் நடைபெற்ற புரட்சிகளின் வெற்றியும் நிரூபித்துள்ளன.


2. இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (1920 - 1964)
இ.பொ.க. முதலாவது கட்டம் (1920 - 1930)
    மாபெரும் அக்டோபர் புரட்சியின் வெற்றிக்குப் பின் இந்தியாவில் மார்க்சியம் பரவ ஆரம்பித்ததைத் தொடர்ந்து பல்வேறு பொதுவுடைமைக் குழுக்கள் உருவாயின.  கல்கத்தா, சென்னை, பம்பாய், வாகூர், கான்புர் ஆகிய இடங்களை மையமாகக் கொண்டு இக்குழுக்கள் இயங்கி வந்தன.  ஆனால் இக்குழுக்ககள் ஒரு புரட்சிகர அய்க்கியப்பட்ட பொதுவுடைமைக் கட்சியைக் கட்டுவதைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் இருந்தன.  1925 டிசம்பரில் கான்புர் மாநாட்டில் பொதுவுடைமைக் கட்சி அமைக்கப்பட்டது கூட சத்தியபக்தன் என்பவரின் தனிப்பட்ட முன்முயற்சியையே சார்ந்திருந்தது.  சரியாகச் சொன்னால் 1925 டிசம்பரில் கான்புரில் நடைபெற்ற முதல் மாநாடு தன்னெழுச்சியாக நடந்த ஒரு நிகழ்ச்சியாகவே இருந்தது.
    உண்மையில் அகிலத்தின் பிரதிநிதியின் முன்னிலையில் இ.பொ.க. அமைக்கும் திட்டத்தை சிங்காரவேலு செட்டியாரும், பங்கேயும் எதிர்த்தனர்.  மாறாக வெளிப்படையான தொழிலாளர் - விவசாயிகள் மக்கள் திரள் கட்சியைக் கட்டுவதில் தீவிரம் காட்டினர்.  உண்மைியல் ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு அய்க்கிய முன்னணியாகவே அதைக் கட்ட விரும்பினர்.  அதாவது ஒரு புரட்சிகர கட்சியும் அதன் தலைமையில் புரட்சிகர அய்க்கிய முன்னணியும் கட்டுவதற்கு பதிலாக கட்சியைக் கட்டுவதைப் புறக்கணிப்பது, ஒரு திட்டத்தின் அடிப்படையிலான அய்க்கிய முன்னணியைக் கட்டாமல் அது போன்ற ஒன்றையே மக்கள் திரள் கட்சி என்ற பெயரில் கட்டுவது என்ற தவறான போக்குகள் இருந்தன.  மேலும் இந்த மக்கள்திரள் கட்சி இந்திய தேசிய காங்கிரசின் இடதுசாரி பிரிவாகச் செயல்படுவது எனத் திட்டமிட்டு செயல்படுத்தினர்.
   
    காங்கிரஸ் கட்சியைப் பற்றிய இவர்களுடைய கண்ணோட்டம் தவறானதாகவே இருந்தது.  காங்கிரஸ் மாநாடுகளில் ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு திட்டங்களை முன்வைத்து நிறைவேற்றக் கோரும் தீர்மானங்களை விநியோகிப்பதும், காங்கிரஸ் கட்சியையே ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு முன்னணியாக மாற்றுவதும் பொதுவுடைமைக் குழுக்களின் வேலைத் திட்டமாக இருந்தன.
    இந்திய முதலாளிய வர்க்கம் நிலப்பிரபுத்துவத்துடனும், ஏகாதிபத்தியத்துடனும் மக்களுக்கு எதிராக சமரசமாகச் செல்லுவதன் வெளிப்பாடகவே காங்கிரஸ் இயக்கத்தின் செயல் திட்டங்கள் இருந்தன என்பதையும், எனவே காங்கிரஸ் இயக்கமும் அதன் செயல்முறைகளும் முற்றிலும் அம்பலப்படுத்தப்பட வேண்டியவை என்பதையும் பொதுவுடைமைக் குழுக்கள் ஏற்றுக் கொண்டிருக்கவில்லை.
    1925 ஜூலை கூடிய அகிலத்தின் இரண்டாவது பேராயத்தில் லெனின் ஆற்றிய உரை காலனிய நாடுகளின் புரட்சி பற்றிய தெளிவான கண்ணோட்டத்தைக் கொடுத்திருந்தும், அதை இந்தியப் பொகுவுடைமைக் குழுக்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை.
    1925 கான்புர் மாநாட்டில் கட்சி அமைக்கப்பட்டதாய் அறிவிக்கப்பட்டிருப்பினும் உண்மையில் தொடர்ந்து இ.பொ.கட்சி ஒரு பொதுவுடைமைக் கட்சியாய் செயல்படவில்லை.  தொடர்ந்து வெளிப்படையான தொழிலாளர் - விவசாயிகளின் மக்கள் திரள் கட்சி என்ற கண்ணோட்டத்துடனேயே வேலை செய்தது.  பொதுவுடைமை அகிலத்தின் 6வது பேராயம் (1928 ஜூலை - ஆகஸ்டு) இந்திய பொதுவுடைமைவாதிகளின் கடமை பற்றி தெளிவாகவே வழிகாட்டியிருந்தது.  ஒன்றுபட்ட, சுதந்திரமான, சட்டவிரோதமான அய்க்கியப்பட்ட புரட்சிகர கட்சியில் அனைத்து பொதுவுடைமைவாதிகளும் இணைவது முதல் கடமை என அது வலியுறுத்தியது.
    தொழிலாளர்-விவசாயிகள் மக்கள் திரள் கட்சி என்ற கண்ணோட்டத்தையும் அது விமர்சித்திருந்தது.  மேலும் தேசிய காங்கிரஸின் தலைவர்களையும், இயக்கத்தையும் அம்பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியிருந்தது.  ஆனால் இவற்றை எல்லாம் அறிந்தே இ.பொ.க. நிராகரித்தது.  தொடர்ந்து தனது பழைய வேலைமுறைகளையே பின்பற்றியது.
    இவ்வாறு 1920லிருந்து 1930 வரையிலும் இந்தியப் பொதுவுடைமை இயக்கம் மனமறிந்தே லெனினியத்திற்கும், பொதுவுடைமை அகிலத்தின் வழிகாட்டுதலுக்கும் எதிராகவே செயல்பட்டு வந்தது.

இரண்டாவது கட்டம் (1930 - 1934)
    1930 டிசம்பரில் இ.பொ.க.-வின் செயல்முறைத் திட்ட நகல் அறிக்கை இம்பிரிகால் எனும் பத்திரிக்கையில் வெளியிடப்பட்டது.  இது, இதுவரை பொதுவுடைமை இயக்கம் கடைப்பிடித்த கொள்கைகளுக்கு முற்றிலும் மாறான ஒன்றை முன்வைத்தது.  ஏறக்குறைய இதே உள்ளடக்கத்துடன் மீரத் சதி வழக்கில் தண்டனை பெற்ற 18 தோழர்கள் கையெழுத்திட்டு வெளியிட்ட ஓர் அறிக்கையும் இதே நேரத்தில் வெளியிடப்பட்டது.
    இவை கட்சிக்கு ஒரு புரட்சிகர வழியை முன்வைத்தன.  தேசிய காங்சிரசின் கொள்கைகளையும், இயக்கம் மற்றும் தலைவர்களையும் அம்பலப்படுத்துவதன் அவசியத்தை அவை வலியுறுத்தின.  காங்கிரசை ஓர் ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு முன்னணியாக மாற்றும் முயற்சியையோ, வெளிப்படையான தொழிலாளர் - விவசாயிகளின் மக்கள் திரள் கட்சியைக் கட்டும் முயற்சிகளையோ இவை ஆதரிக்கவில்லை.  காலனிய ஆட்சியைத் தூக்கி எறிந்துவிட்டு தொழிலாளர் - விவசாயிகளின் சோவியத்து வடிவிலான ஆட்சி அமைப்பை ஏற்படுத்துவதன் அவசியத்தையும் அதை நோக்கி இந்தியப் புரட்சி இயக்கத்தை வளர்க்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தின.
    ஆனால், இக்காலக்கட்டத்தில் கட்சியானது பல்வேறு குழுக்களாவே நிலவியது.  சில குழுக்கள் 1930 செயல்முறை நகல் திட்டத்தை ஏற்றுக் கொள்ளவே இல்லை.  இதன் விளைவாக கட்சி ஒரே கட்சியாக இல்லாமல் சிதறிய குழுக்களாகவே இருந்தது.

மூன்றாவது கட்டம் (1935 - 1948)
    கட்சி வரலாற்றின் மூன்றாவது கட்டம் தத்-பிராட்லி கோட்பாடு வெளியிடப்பட்டதிலிருந்து தொடங்குகிறது.  இது 1936-ல் இம்பிரிகால் இதழில் வெளியிடப்பட்டது.  இத்தத்துவம் இந்திய தேசிய காங்கிரசை ஓர் ஏகாதிபத்திய எதிர்ப்பு மக்கள் முன்னணியாக மாற்ற வேண்டும் என ஆலோசனை கூறியது.  தத்-பிராட்லி தத்துவத்தையும் இதோடு இணைத்து தேசிய அய்க்கிய முன்னணி பற்றிய குறிப்பையும் இ.பொ.க. தனது உறுப்பினர்களுக்கு 1936-ல் சுற்றுக்கு விட்டது.
    இது அனைத்து பொதுவுடைமைவாத உறுப்பினர்களும் அவர்களைச் சார்ந்த மக்கள் திரளும் மக்கள் திரள் அமைப்புகளும் தேசிய காங்கிரஸ் ஒட்டுமொத்தமாக உறுப்பினராக வேண்டும் என்றும் அதன் மூலம் தேசிய காங்கிரசுக்கு ஓர் இடதுசாரி திசைவழியைத் தரவேண்டும் என்றும் கூறியது.  இதன் மூலம் கம்யுனிஸ்ட் இயக்கத்தின் தனித்தன்மை ஒழிக்கப்பட்டு அது காங்கிரஸ் கட்சியின் ஓர் அங்கமாக மாற்றப்பட்டது.  முறையாக மையப்படுத்தப்பட்ட அமைப்போ தனியான குறித்த திட்டமோ வழிமுறைகளோ இ.பொ.க.விற்கு இல்லை.    இந்நிலையில் காங்கிரஸ் கட்சிக்குள் இணைந்து அய்க்கிய முன்னணியாகச் செயல்படுவது என்ற செயலுத்தி கட்சியைத் திரிபுவாதக் குழிக்குள் தள்ளியது.  1943-ல் நடந்த கட்சியின் முதல் காங்கிரஸ் இந்நிலைமையை மாற்றிவிடவில்லை.  மாறாக, மேலும் தொடர்ந்து அதே பாதையையே உறுதிப்படுத்தியது.  1935-லிருந்து பொதுச்செயலராய் இருந்து பி.சி.ஜோசி மீண்டும் பொதுச்செயலராகத் தேர்வு செய்யப்பட்டார்.
    தேசம் என்பது பற்றியும், தேசத்தின் உருவாக்கத்திற்கும், ஜனநாயகப் புரட்சிக்கும் உள்ள தொடர்பு பற்றியும், மார்க்சியம் தெளிவாக அறிவுறுத்தி இருந்தபோதிலும், 1942-43 வரை இந்தியா ஒரு பல்தேசிய இன நாடு என்பதை இ.பொ.க. உணரவில்லை.  1940-களில் மொழிவழி தேசியத் கோரிக்கைகளுக்கான போராட்டங்கள் தீவிரமடைந்ததையொட்டி, அது முதன்முதலாக தேசிய இனச்சிக்கல் குறித்து ஆய்வைத் தொடங்கியது.  இதன் விளைவாக 1942-43ல் இந்தியா ஒரு பல் தேசிய இன நாடு என்றும், தேசிய இனங்களின் தன்நிலைத் தீர்வுரிமையை ஏற்றுக்கொள்வதன் மூலம் இந்தியாவின் ஒற்றுமையைப் பாதுகாப்பது என்றும் முடிவுக்கு வந்தது.  அதாவது இந்தியாவில் தேசிய இனங்கள் பற்றிய அதன் ஆய்வும் முடிவும் ஜனநாயகப் புரட்சியை வெற்றிகரமாக நடத்துவது பற்றிய கவலையிலிருந்து அல்லாமல் இந்திக ஒருமைப்பாட்டைக் காப்பது பற்றிய கவலையிலிருந்தே தொடங்கியது.
    நாட்டில் மக்களின் வீரமிக்க போராட்டங்கள் தீவிரமடையும்போது கூட விடுதலைப் போராட்டத்தின் தலைமையை எடுத்துக் கொள்வது பற்றிய சிந்தனையே இல்லாமல் இருந்தது.  மாறாக காங்கிரஸ் - பொதுவுடைமை இணைப்பு முன்னணி ஏற்படுத்துவது பற்றியே சிந்தித்தது.  இ.பொ.க. வின் தலைமை காந்தியை தேசத்தின் தந்தை என்றும் அவருடைய தலைமையில் ஒரு ஜனநாயக ரீதியான உடன்பாட்டின் மூலம் சுதந்திரம் தரும்படியும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கும் கொடுத்த மனுவில் கேட்டுக்கொள்ளும் இழிநிலைக்கும் சென்றது.  பி.சி.ஜோசி தலைமையில் கட்சியானது இத்தகைய சமரச சரணடைவுப் பாதையை மேற்கொண்டதை எதிர்த்து கட்சிக்குள் முரண்பாடுகள் தீவிரமடைந்தன.

நான்காவது கட்டம் (1948 - 1951)
    பி.சி.ஜோசியின் தலைமையிலான வாது சந்தர்ப்பவாதத்தை எதிர்த்த போராட்த்தில் பி.டி.ரணதிவேயின் தலைமை 1948-ல் நடைபெற்ற இரண்டாவது கட்சிப் பேராயத்தில் நிலை நாட்டப்பட்டது.  1947-ல் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ஆட்சி அதிகாரம் முடிவுக்கு வந்தபின் ஏகாதிபத்தியத்தின் ஆட்சி வடிவம் மட்டுமே மாறியுள்ளதாகவும், சுதந்திரம் போலியானது என்றும் ரணதிவே தலைமை கூறியது.  மேலும் சமுதாயத்தின் பிரதான முரண்பாடு, அடிப்படை முரண்பாடு பற்றிய சரியான கணிப்புக்கு அது வரவில்லை.  இதனால் ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலப்பிரதபுத்துவ எதிர்ப்பு சக்திகள் அனைத்தையும் திரட்ட வேண்டும என்பதை அது ஏற்றுக்கொள்ளவில்லை.  புரட்சியின் கட்டத்தில் குழப்பமான நிலைப்பாட்டை மேற்கொண்டது.  சோசலிசப் புரட்சிக் கட்டத்தையும், ஜனநாயகப் புரட்சிக் கட்டத்தையும் அது ஒன்றோடு ஒன்று போட்டுக் குழப்பியது.  இதன் விளைவாக பணக்கார விவசாயிகளையும் சிறு முதலாளிகளையும் கூட புரட்சியின் எதிரிகளாகக் கருதியது.
    மேலும், ரஷ்ய அக்டோபர் புரட்சிப் பாணியில் போராட்ட முறைகளை வகுத்துக் கொண்டு தீவிரப்படுத்தியது.  கட்சிக்குள் ஜனநாயகமற்ற மத்தியத்துவத்தை அமல்படுத்தியது.  இதனால், ரணதிவே தலைமை கடும் நெருக்கழக்குள்ளாகியதோடு எதிர்ப்புக்கும் உள்ளாகியது.
    இக்கட்டத்தில் ஆந்திராவில் நிஜாமை எதிர்த்து நடந்த தெலிங்கானா போராட்டத்தை நடத்திய ஆந்திரத் தலைமை தெலிங்கானாப் போராட்ட மாதிரியில் சீனப் புரட்சிப் பாதையில் இந்தியப் புரட்சியை நடத்திச் செல்ல வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தது.  நெருக்கடிக்கும் கடும் எதிர்ப்புக்கும் உள்ளாகியிருந்த ரணதிவேயின் தலைமைக்கு பதிலாக தெலிங்கானா போராட்டப் பாதையை (சீனப் பாதையை) முன்வைத்த ராஜேஸ்வரராவ் தலைமை 1950-ல் ஏற்பட்டது.  ரணதிவே தலைமையைப்போல் அன்றி ராஜேஸ்வரராவ் தலைமை இந்தியப் புரட்சியின் கட்டம் புதிய ஜனநாயகப் புரட்சியே என்பதையும் நட்பு எதிரி சக்திகள் பற்றியும் தெளிவாக வரையுறுத்திருந்தது.  ஆனால் இத்தலைமை தொடர்ந்து நீடிக்கவில்லை.  1951-ல் அஜாய்கோஷ் கட்சித் தலைமையாகத் தேர்வு செய்யப்பட்டார்.

ஐந்தாவது கட்டம் (1951 - 1964)
இ.பொ.க.(மா) தோற்றம்
    1951-ல் அஜாய்கோஷ் தலைமையில் நிறைவேற்றப்பட்ட கட்சித் திட்டம் (நகல்), கொள்கை அறிக்கை, செயலுத்தி வழி ஆகிய மூன்று ஆவணங்கள் பி.டி.ரணதிவேயின் வழியையும், சீனப் பாதையையும் நிராகரித்தன.
    அதன்பின் 1953-ல் மதுரையில் நடைபெற்ற கட்சியின் மூன்றாவது பேராயம் கட்சியை ஒரு பாராளுமன்றவாதக் கட்சியாக மாற்றும் அடிப்படைகளைக் கொடுத்தது.  மந்திரி சபையைக் கைப்பற்றுவதும் பாராளுமன்றக் கூட்டணியும் கட்சியின் செயல்திட்டமாக இருந்தது.  இந்திய அரசின் வெளிநாட்டுக் கொள்கையில் சமாதானத்திற்கு உதவி செய்யும் சில அம்சங்கள் இருப்பதாகக் கட்சியின் மத்தியக் குழு கூறியது.  1955 ஜுனில் மத்தியக் குழு பெரும்பான்மையாக நிறைவேற்றிய தீர்மானம் நேருவின் வெளிநாட்டுக் கொள்கையைப் பாராட்டி அதை வலுவடையச் செய்வதற்கு தனது முழு ஆதரவைத் தெரிவித்தது.  நிலப்பிரபுத்துவத்துடன் சமரச சீர்திருத்தவாதக் கொள்கையைப் பின்பற்றியதையும் ஆதரித்தது.  இதனால் நிலப்பிரபுத்துவத்துக்கும், முதலாளித்துவத்துக்கும் இடையிலான முரண்பாடு கூர்மையடைவதாகக் காரணம் காட்டியது.  உண்மையில் இது இந்திய ஆளும் வர்க்கங்களின் முதலாளிய சீர்திருத்தப் பாதையை உயர்த்திப் பிடிப்பதாகவே இருந்தது.  இத்தகைய ஆளும் வர்க்கத் திட்டங்களுக்கு எதிரானவர்களை எதிர்க்கக் கட்சி தீர்மானித்தது.  இத்தகைய முதலாளிய சீர்திருத்தவாத நோக்கத்துடனேயே ஒரு ஜனநாயக முன்னணியைக் கட்டுவதற்கான திட்டத்தை முன்வைத்தது.
    கட்சியின் பாலக்காடு (1056), அமிர்தசரஸ் (1958), விஜயவாடா(1961) பேராயங்கள் கட்சியை முற்றிலும் ஒரு பாராளும்னறவாத, முதலாளிய சீர்திருத்தவாதக் கட்சியாக மாற்றியமைக்கும் முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றின.  மேலும் ஜனநாயகத்தையும், சோசலிசத்தையும் சமாதான வழியில் கொண்டுவரும் தீர்மானங்களையும் நிறைவேற்றின.  இதே நேரத்தில் சர்வதேசிய ரீதியில் ரசிய திரிபுவாதத்தை - சமாதான சகவாழ்வு, சமாதான போட்டி, சமாதான மாற்றம் என்ற வர்க்க சமரசக் கொள்கைகளை, உயர்த்திப் பிடித்தன.  தேசிய, சர்வதேசிய கொள்கைகளில் வர்க்கப் போராட்டக் கொள்கைகளைக் கைவிட்டு வர்க்க சமரச கொள்கைகளைப் பின்பற்றியதன் மூலம் இ.பொ.க.முற்றிலும் ஒரு வலது சந்தர்ப்பவாதக் கட்சியாகச் சீரழிந்துவிட்டது.  இதன் தவிர்க்க முடியாத விளைவாக இந்திய - சீன எல்லைப் பிரச்சினையில் சீன எதிர்ப்பு தேசிய வெறிக் கொள்கையைப் பின்பற்றியது.
    எனினும் வலது சந்தர்ப்பவாத வர்க்க சமரச கொள்கைக்கு கட்சிக்குள் எதிர்ப்புகள் இல்லாமல் இல்லை.  காங்கிரஸ் கட்சியின் முற்போக்கு பிரிவுடன் பாராளுமன்றவாதக் கூட்டு என்ற கொள்கைக்கும், முதலாளிய சீர்திருத்த சமரசப் பாதையைப் பின்பற்றுவதை ஆதரிப்பது என்ற கொள்கைக்கும், சர்வதேசியப் பொதுவுடைமை இயக்கத்தில் ரசிய நவீன திரிபுவாத கொள்கைகளை ஆதரிப்பதற்கும், இந்திய - சீன எல்லைப் பிரச்சினையில் பின்பற்றப்பட்ட தேசிய வெறிக் கொள்கைக்கும் கட்சிக்குள் எதிர்ப்பு இருந்தது.  இதன் தவிர்க்க முடியாத விளைவாகவே விஜயவாடா பேராயத்துக்குப் பின் 1964-ல் கட்சி பிளவுக்குள்ளாகி இ.பொ.க.(மா) தோன்றிது.
    1964-ல் ஏற்பட்ட பிளவுக்குப் பின் கல்கத்தாவில் கூடிய கட்சிப் பேராயம், தேசிய, சர்வதேசிய திரிபுவாதங்களை எதிர்த்துப் போராடிய பொதுவுடைமைவாதிகளைப் பிரதிநிதித்துவப் படுத்தியது அதே நேரத்தில் அதே ஆண்டில் தேசிய, சர்வதேசிய திருத்தல் வாதத்தை உயர்த்திப் பிடித்தவர்களும் ஏழாவது போராயத்தைக் கூட்டி மேலும் தமது வர்க்க சமரசப் பாதையை முன்னெப்போதும் விட உறுதிப்படுத்திக் கொண்டனர்.
   

3. இ.பொ.க. (மா.லெ) தோற்றமும், அதில் மூவகைப் போக்குகளும் (1964 - 1975)
    தேசிய சர்வதேசிய திரிபுவாதத்தை எதிர்த்து இ.பொ.க.(மா) தோன்றியதாயினும் திரிபுவாதத்தை எதிர்த்த சரியான மார்க்சிய லெனினிய நிலைப்பாடுகளின் அடிப்படையில் கட்சி உறுதி செய்யப்படாததால் கட்சி மீண்டும் திரிபுவாதத்தில்-பாராளுமன்றவாதம் மற்றும்  முதலாளிய சீர்திருத்தவாதத்தில் விழுவதற்கான அனைத்து அடிப்படைகளையும் கொண்டிருந்தது.  கட்சி அமைக்கப்பட்ட பின் கல்கத்தா பேராயம் முடிந்த வெகு விரைவிலேயே இது வெளிப்பட்டது.  1967 பொதுத்தேர்தலில் தீவிரமாகப் பங்கெடுத்துக் கொண்டு மேற்கு வங்கத்தில் பதினான்கு கட்சி கூட்டணி மந்திரி சபை அமைத்தது.  மக்களின் போராட்டங்களுக்கு ஆதரவளிப்பதற்காகவே மந்திரி சபையில் பங்கெடுப்பதாகக் கூறிக் கொண்டது.
    இவ்வாறு வெகு விரைவில் பாராளுமன்றவாதக் கட்சியாகத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டதன் விளைவாய் கட்சிக்குள் திரிபுவாதத்தை எதிர்த்த போராட்டம் தொடர்ந்து நடந்தது; டார்ஜிலிங் மாவட்டத்திலிருந்து சாருமஜும்தார், சமரசமற்ற போராட்டத்தின் மூலம் புதிய புரட்சிகரக் கட்சியைக் கட்ட வேண்டும் என்ற ஓர் அறிக்கையை (1966 ஆகஸ்டு) வெளியிட்டார்.  தொடர்ந்து அவர் இ.பொ.க.(மா) நிலைப்பாடுகளை எதிர்த்து வெளியிட்ட ஆறு கட்டுரைகள் இ.பொ.க.(மா)வின் வலது சந்தர்ப்பவாத மற்றும் தீவிரவாத நிலைப்பாடுகளையே போதித்தன.  பாராளுமன்றப் பாதையைப் புறக்கணித்து ஆயுதப் போராட்டப் பாதையை முன்வைத்தபோதிலும் மக்கள் திரள் இயக்கங்கள் மற்றும் அமைப்புகளின் தேவையை நிராகரித்தன.  பாராளுமன்றத்தை ஒரு செயலுத்தி அடிப்படையில் பயன்படுத்துவதை எதிர்த்தன.  முற்றிலும் சதித்தன்மை வாய்ந்த குழு நடவடிக்கைகளை மட்டுமே முன்வைத்தன.
    இதே நேரத்தில் சிலிகுரி உள்ளுர் கட்சிக் குழு இ.பொ.க.(மா)வின் வலது சந்தர்ப்பவாத நிலைப்பாடுகள் அனைத்தையும் மறுத்துரைத்த அதே வேளையில் மக்கள்திரள் அமைப்புகள் மற்றும் இயக்கங்களின் தேவைகளையும் இ.பொ.க.(மா)விற்குள் உட்கட்சிப் போராட்டம் நடத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியது.
    நக்சல்பாரியில் வெடித்தெழுந்த விவசாயிகள் எழுச்சி சாருமஜும்தாரின் இடது சந்தர்ப்பவாத மற்றும் தீவிரவாத நிலைப்பாடுகளின் அடிப்படையில் நடத்தப்படவில்லை.  அதே நேரத்தில் சிலிகுரி உள்ளுர் கட்சிக் குழு கூறியது போல் ஓர் உட்கட்சி சித்தாந்தப் போராட்டம் நடத்தப்பட்டு வலது சந்தர்ப்பவாதத்தை எதிர்த்த சித்தாந்தப் போராட்டத்தில் கட்டப்பட்டு உறுதியாக்கப்பட்ட ஒரு கட்சியின் தலைமையிலும் நடத்தப்படவில்லை.  எனவே நக்சல்பாரி போராட்டம் இ.பொ.க.(மா)வின் வலது சந்தர்ப்பவாத நிலைப்பாடுகளை எதிர்த்த பலரையும் கலகம் செய்யத் தூண்ழயது எனினும், அவர்கள் அனைவரையும் சரியான மார்க்சிய - லெனினிய அடிப்படையிலான ஒரு உறுதியான கட்சியாக அய்க்கியப்படுத்தப் போதுமானதாய் இல்லை.
    மேலும், நக்சல்பாரி போராட்டத்தை அடுத்து அதன் தொடர்ச்சியாய் உருவான அனைத்திந்திய பொதுவுடைமைப் புரட்சியாளர்களின் ஒருங்கிணைப்புக் குழுவும் வலது மற்றும் இடது திரிபுகளை எதிர்த்த சித்தாந்தப் போராட்டத்தின் மூலம் கட்சியைக் கட்டுவதற்கான பலமான சித்தாந்தத் தளத்தை நிறுவுவதை தனது முதன்மையான பணியாக எடுத்துக் கொள்ளவில்லை.  மாறாக, நக்சல்பாரி பாணியிலான போராட்டத்தை நாடெங்கும் கட்டமைப்பதையே தனது முதன்மையான பாணியாக எடுத்துக் கொண்டது.  இதன் விளைவாக ஒருங்கிணைப்புக் குழுவிற்குள் சாருமஜும்தாரின் இடது சந்தர்ப்பவாத மற்றும் தீவிரவாத வழிமுறைகளும் கொள்கைகளும் படிப்படியாக நிலைநாட்டப்பட்டன.  அவருடைய தவறான வழிக்கு மாறாக வந்த சரியானதும், தவறானதுமான பல்வேறு கருத்துகளையும் வழிகளையும் முறியடித்து சாருமஜும்தார் தனது இடது சந்தர்ப்பவாத வழியை நிலைநாட்டினார்.  1970-ல் எட்டாவது கட்சி பேராயத்தைக் கூட்டியபோது அது முற்றிலும் சாருமஜும்தாருடைய இடது சந்தர்ப்பவாத தீவிரவாத கொள்கைகளையே உயர்த்திப் பிடிப்பதாய் இருந்தது.
    இதனால் 'சீனத்தின் தலைவர் நம் தலைவர், சீனத்தின் பாதை நம் பாதை', மக்கள் திரள் அமைப்புகளும் இயக்கங்களும் ஆயுதப் போராட்டத்திற்குத் தடை, வர்க்க எதிரிகளை அழித்தொழிக்கும் குழு நடவடிக்கை மட்டுமே ஒரே போராட்டமுறை, வர்க்க எதிரிகளை அழித்தொழிக்கும் கொள்கையை ஏற்றுக் கொள்ளாதவர் பொதுவுடைமைவாதி இல்லை.  கூலி - ஏழை விவசாயிகள் மட்டுமே புரட்சிகர வர்க்கம், விவசாயிகளின் பிரச்சினைகளையும் தீர்க்கும் என்பன போன்ற சாருமஜும்தாரின் தவறான கொள்கைகள் கட்சியின் நிலைப்பாடுகளாயின.  இது கட்சியை முற்றிலும் மக்களிடமிருந்து தனிமைப்படுத்துவதாகவும் கட்சியை முற்றிலும் சீரழிப்பதாகவும் இருந்தது என்பதை வரலாறு நிரூபித்து விட்டது.
    அதே நேரத்தில் ஆந்திராவில் நாகி தலைமையில் இ.பொ.க.(மா)வுக்குள் உட்கட்சி சித்தாந்தப் போராட்டம் நடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.  ஆனால், இ.பொ.க.(மா) உட்கட்சி சித்தாந்தப் போராட்டத்தை நேர்மையாக அனுமதக்காமல் சீரழித்ததாலும், மற்றொருபுறம் இ.பொ.க.(மா)வுக்குள் வலது சந்தர்ப்பவாதமும், அதை எதிர்த்து நக்சல்பாரியை ஆதரித்த பலரிடத்தில் இடது தீவிரவாதமும் மேலாதிக்கத்தில் இருந்ததாலும் இம்முயற்சியும் ஒரு புரட்சிகர கட்சியைக் கட்டுவதை நோக்கி முன்னேறவில்லை.
    இ.பொ.க.(மா)வின் வலது சந்தாப்பவாதத்தை எதிர்த்த போராட்டம் (சிதைந்த வடிவில்) இடது தீவிரவாதிகளால் நடத்தப்பட்டதால் கட்சியின் எட்டாவது பேராயத்தில் முற்றிலும் இடது தீவிரவாத கட்சியே பிறப்பெடுத்தது.  கட்சித் தலைமை எல்லாவித உட்கட்சி ஜனநாயகத்தையும் மறுத்தது.  சித்தாந்தப் போராட்டத்தை மறுத்தது.   இதன் தலைமையில் நடைபெற்ற நக்சல்பாரி போராட்டம் மட்டுமின்றி சீகாகுளம், லக்கிம்பூர், கேரிதேப்ரா, கோபி வல்லபபூர், முசாகரி, மற்றும் பல பகுதிகளில் விவசாயிகளின் ஆயுதமேந்திய போராட்டங்கள் கடும் பின்னடைவுக்கு உள்ளாகின.  இதன் விளைவாகக் கட்சி, பேராயம் கூடிய வெகு விரைவிலேயே பல்வேறு குழுக்களாகப் பிளவுபட்டுச் சிதறியது.  கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகியது.
    இ.பொ.க.(மா)வின் வலது சந்தர்ப்பவாதத்தை எதிர்த்து மார்க்சிய - லெனினிய அடிப்படையிலான சரியான நிலைப்பாடுகளுடன் போராடாமல் இடது சந்தர்ப்பவாத கோட்பாடுகளைக் கொண்டே போராடியதால் கட்சியில் இடது சந்தர்ப்பவாத மேலாதிக்கத்திற்கு வந்தது மட்டுமல்ல, வலது சந்தர்ப்பவாதமும் முறியடிக்கப்படவில்லை. தொழிற்சங்கவாதத்தை எதிர்ப்பதற்குப் பதில் தொழிற்சங்க அமைப்புகளையே எதிர்ப்பது, பொருளாதார போராட்டங்களையே எதிர்ப்பது, பாராளுமன்றப் பாதையை எதிர்ப்பதற்குப் பதில் பாராளுமன்றத்தில் பங்கெடுப்பதையே எதிர்ப்பது, திரிபுவாத அமைப்பு முறைகளை எதிர்ப்பதற்குப் பதில் அமைப்பு முறைகளையே எதிர்ப்பது, சட்டவாதத்தையும் வெளிப்படை இயக்கவாதத்தையும் எதிர்ப்பதற்குப் பதில் சட்ட முறைகளையும், வெளிப்படை இயக்க முறைகளையும் சட்ட விரோத மற்றும் தலைமறைவு இயக்க அமைப்பு முறைகளுடன் இணைப்பதையே எதிர்ப்பது இடது சந்தர்ப்பவாத நிலைப்பாடுகளே முன்வைக்கப்பட்டதால் எட்டாவது பேராயத்தில் பிறப்பெடுத்த இ.பொ.க.(மா.லெ) குழுக்களில் பலவும் இடது சந்தர்ப்பவாதத்தை எதிர்த்து வலது சந்தர்ப்பவாத்திற்கும், வலது சந்தர்ப்பவாதத்தை எதிர்த்து இடது சந்தர்ப்பவாதத்திற்கும் பலியாகின.
    அதே நேரத்தில் இ.பொ.க.(மா) ஆகிய இரண்டும் சர்வதேசிய ரீதியில் ருசிய திருத்தல்வாத்ததை உயர்த்திப் பிடிப்பதிலும் இந்திய அளவில் பாராளுமன்றப் பாதைக்கு விசுவாசமாக இருப்பதிலும் சிறிதும் வேறுபாடற்ற ஒற்றுமை கொண்டவை ஆகின.  இவ்விரண்டு திருத்தல்வாதக் கட்சிகளும் அமைதிவழி மற்றும் பற்றிப் போதிப்பதுடன் கூடவே, இடது ஜனநாயக முன்னணி என்ற பாராளுமன்ற முன்னணிக்காக அய்க்கியப்பட்டன.  இவ்விரு அமைப்புகளுமே இந்திய ஒற்றுமை பற்றிய கவலையிலிருந்து தேசிய இனங்களின் தன்னிலைத் தீர்வுரிமை பற்றிய தீர்மானத்தை முற்றிலும் கைவிட்டன.
    புகழ்பெற்ற நக்சல்பாரி உழவர் பேரெழுச்சியை அடுத்து இ.பொ.க.(மா)விலிருந்து பிளவுபட்டுத் தோன்றிய மார்ச்சிய -லெனினிய புரட்சிகர இயக்கம் மூவகைப் போக்குகளைக்ட கொண்டிருந்தது.
    முதல் போக்கு தோழர் சாருமஜும்தார் தலைமையிலானது.  இது அனைத்துவகை ம.தி.இயக்கங்களையும், அமைப்புகளையும் திரிபுவாத நடைமுறைகள் எனக் கூறி நிராகரித்தது.  தனிநபர் அழித்தொழிப்பு எனும் கொரில்லாப் போராட்ட அமைப்பு முறையை மட்டுமே ஒரே போராட்ட அமைப்பு முறையாக முன்வைத்தது.
    இரண்டாவது போக்கு ஆந்திரத் தோழர்கள் நாகி, சந்திரபுல்லா தலைமையிலானது.  இது தனிநபர் அழித்தொழிப்பை எதிர்த்தது.  ம.தி.அமைப்பு, இயக்கம் ஆகியவற்றின் தேவைகளை வலியுறுத்தியது.  ஆனால் அரசியல் முழக்கம், இயக்கம் ஆகியவற்றைப் புறக்கணித்ததுடன் இடைக்காலப் புரட்சி அரசு, அதற்கான முன்னணி போன்ற கோட்பாடுகள் அனைத்தும் திரிபுவாதம் என்ற கோட்பாட்டை உருவாக்கிக்கொண்டது.
    மூன்றாவது போக்கு சாருமஜும்தாரின் தனிநபர் அழித்தொழிப்புக்கு எதிராகத் தோன்றி ம.தி.அமைப்பு மற்றும் இயக்கங்களின் தேவையினை வலியுறுத்தியதுடன் அரசியல் முழக்கம், இயக்கம், இடைக்காலப் புரட்சி அரசு போன்ற கோட்பாடுகளுக்கும் அரசியலரங்கிலான பணிகளுக்கும் அழுத்தம் கொடுத்தது.  எவ்வாறாயினும் இம்மூவகை போக்குகளும் இ.பொ.க.(மா)விலிருந்து வேறுபட்ட முறையில் இந்தியப் பெருமுதலாளிகளைத் தரகு முதலாளிகள் என வரையறுப்பது, ஆயுதப் போராட்டத்தை உயர்த்திப்பிடிப்பது, தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பது, குருச்சேவ் புரட்டல்வாதத்தை நிராகரிப்பது ஆகியவற்றில் பொதுத்தன்மை கொண்டவையாகவே இருந்தன.  மேலும், தேசம் பற்றிய விசயத்தில் தொடர்ந்து ஏகாதிபத்திய பொருளாதாரவாதத்தைக் கொண்டிருப்பதிலும் இம்மூவகைப் போக்குகளும் பொதுத்தன்மை கொண்டவையாகவே இருந்தன.  மூன்றாவது போக்கை முதலில் தொடங்கி வைத்தவர் தோழர் சத்திய நாராயணசிங் சாருமஜும்தாரின் தனிநபர் அழித்தொழிப்பு வழிமுறையை எதிர்த்து ம.தி.அமைப்புகள், இயக்கங்களின் தேவையை வலியுறுத்தி வந்த இவர் அவசரநிலைப் பிரகடனத்தை அடுத்து பாசிச எதிர்ப்பு முன்னணி மற்றும் இடைக்காலப் புரட்சி அரசு போன்ற கோட்பாடுகளை முன்வைத்தார்.

தமிழகத்தில் இ.பொ.க.(மா.லெ)யில் த.நா.அ.குழு: அதன் அ.கோ.முடிவுகளும் புரட்சிகர ம.தி.வழியும் (1975 - 1992)
    நக்சல்பாரி விவசாயிகள் பேரெழுச்சியின் தொடர்ச்சியாய் அ.இ.பொ.புரட்சியாளர்களின் ஒருங்கிணைப்புக் குழுவும் அதிலிருந்து இ.பொ.க(மா.லெ)யும் உருவானதை அடுத்து தமிழகத்தில் இ.பொ.க(மா.லெ)யின் தமிழ் மாநிலக் குழு அமைந்தது.  சாருவின் தனிநபர் அழித்தொழிப்பு மற்றும் இடது தீவிரவாத வழிமுறையையே தமிழ் மாநிலக் குழு பின்பற்றியதால் அதற்கு எதிரான போராட்டம் தமிழகத்திலும் நடைபெற்றது.  தமிழகத்தில் மேற்கு மண்டலத்தில் இய்கிய கட்சிக் குழு (1975) இப்போராட்டத்தில் முன்னணியில் இருந்ததால் அக்குழு கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டு விட்டதாக மாநிலக் குழுவால் அறிவிக்கப்பட்டது.  இதன்பின் மேற்கு மண்டலக் குழு தன்னை தற்காலிக அமைப்புக் குழுவாக (1976) அமைத்துச் செயல்பட்டு பின்னர் தனது முதல் பிளீனத்தைக் கூட்டி (1977) அதிலிருந்து மாநில அமைப்புக் குழுவாகச் செயல்படத் தொடங்கியது.  (இதற்கிடையே மாநிலக் குழு மூன்றாகப் பிளவுபட்டு ஒரு பிரிவு மா.அ.குழுவுடனும் மற்றொரு பிரிவு வினோத் மிஸ்ரா குழுவுடனும், மற்றொன்று ம.யு.குழுவுடனும் இணைந்தன).
    தமிழகத்தில் சாருவின் தனிநபர் அழித்தொழிப்பு மற்றும் இடது தீவிரவாத வழிமுறைகளுக்கு எதிராகவும் ம.தி.வழிமுறைக்காகவும் போராடி உரவான மா.அ.குழு.  அனைத்திந்திய அளவில் சாருவின் தனிநபர் அழித்தொழிப்பு மற்றும் இடது தீவிரவாத வழிமுறைகளுக்கு எதிராகப் போராடி வந்த சத்திய நாராயணசிங், அவசரநிலைக்காலத்தில் முன்வைத்த பாசிச எதிர்ப்பு முன்னணி மற்றும் இடைக்காலப் புரட்சி அரசு என்ற கோட்பாட்டை பாட்டாளி வர்க்கத் தலைமை என்ற நிபந்தனையுடன் ஏற்றுக் கொண்டது.  இவ்வாறு இ.பொ.(ம -லெ) இயக்கத்தில் நிலவிய மூவகைப் போக்குகளில் மூன்றாவது போக்குடன் அது தன்னை இணைத்துக் கொண்டது. எனினும் இடது சந்தர்ப்பவாத அ.கோ.நிலைபாடுகளிலிருந்தும், வேலைமுறைகளிலிருந்தும் மா.அ.குழு முற்றிலும் விடுபடவில்லை.
    அவசரநிலைக்காலம் முடிவுற்றபின் பாசிச அபாயத்திற்கு எதிராக 'தேசியத் திட்டம்' ஒன்றையும் சில முழக்கங்களையும் அது முன்வைத்தது.  ஆனால் அது முன்வைத்த தேசியத் திட்டம் புதிய சனநாயகத் திட்டத்தில் சில முழக்கங்களைச் சேர்த்துக்கொண்டதாக இருந்ததேயன்றி குறிப்பான அரசியல் சுழலை - பாசிச அபாயப் போக்கை எதிர்கொள்வதற்குப் போதுமான குறிப்பான திட்டமாக இல்லை.  அதாவது இடது சந்தர்ப்பவாதத் திட்டமாகவே இருந்தது.
    தோழர் சத்தியநாராயணசிங் பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் பங்கெடுப்பது பற்றி முடிவு எடுத்தபோது அவருடைய நிலைப்பாட்டை பாராளுமன்றவாதத்திற்கு எதிர்ப்பு என்ற நிலைபாட்டிலிருந்து அன்றி புறக்கணிப்புவாத நிலைப்பாட்டிலிருந்தே விமர்சனம் செய்தது; புறக்கணிப்புவாதத்தையே தனது நிலைப்பாடாக உறுதி செய்து அதிலும் இடது சந்தர்ப்பவாத நிலையையே மேற்கொண்டது.
    சமுதாயத்தின் முதன்மை முரண்பாடு நிலப்பிரபுத்துவத்திற்கும் மக்களுக்கும் இடையிலானது என்று தவறாகத் தீர்மானித்தது மட்டுமின்றி அவ்வாறு தீர்மானித்ததற்கு பொருளாதார விளக்கம் அளித்தது.  அடிப்படை முரண்பாடுகளில் ஒன்றுதான் முதன்மை முரண்பாடாக இருக்க முடியும் என்று கூறியது.  அதே நேரத்தில் முதன்மை முரண்பாடு பற்றிய அதன் தீர்மானத்திற்கு முரண்பாடாக, பாசிச அபாயத்திற்கு எதிராகத் தேசியத் திட்டம், அரசியல் அரங்கிலான பணி என்று சந்தர்ப்பவாதமாகத் தீர்மானித்துக் கொண்டது.
    அரசியல் - ஆயுதப் போராட்ட உறவுகளில் அரசியல் போராட்டத்தின் முக்கியத்துவத்தை அங்கீகரித்த அதே வேளையில் ஆயுதப் போராட்டத்திற்கு இணையாகஇ அக்கம்பக்கமாக அரசியல் போராட்டம் நடத்தப் போவதாக விளக்கம் அளித்தது.  ஆயுதப் போராட்டம் நிகழ்ச்சி நிரலில் இல்லாத போது ஆயுதப் போராட்டத்திற்கு இணையாகவும் அக்கம் பக்கமாகவும் அரசியல் போராட்டம் என்கிற அதன் விளக்கம் ஆயுதப் போராட்ட வாய்வீச்சு, அரசியல் போராட்ட முடமாக்கல் என்பதாகவே முடிந்தது.
    அது மட்டுமின்றி டெங் முன்வைத்த மூன்றுலகக் கோட்பாட்டை உலகப் புரட்சிக்கான மூலவுத்தி என்ற அளவுக்கு உயர்த்தி மா - லெ-க்கு எதிரான ஒரு சந்தர்ப்பவாத நிலைப்பாட்டை மேற்கொண்டது.
    சீன பாணியிலான நீண்ட கால மக்கள் யுத்தப்பாதையை அனைத்து மூன்றாம் உலக நாடுகளுக்கும் பொருந்தும் பொதுக் கோட்பாடு என்றும் அதுவே மாவோ சிந்தனை என்றும் கூறி மா - சே-துங் சிந்தனையைக் கொச்சைப்படுத்தியது.
    மா.அ.குழுவின் இத்தகைய சந்தர்ப்பவாத நிலைபாடுகளை எதிர்த்து தோழர் கார்முகில், அவ்வப்போதும், இரண்டாவது பிளீனத்தில் அவர் வைத்த அரசயில் அமைப்பு அறிக்கையிலும் விமர்சனங்களை முன் வைத்தார்.  இதன் காரணமாக கட்சிக்குள் எழுந்த அ.கோ.பிரச்சினைகளைத் தீர்க்க உட்கட்சி விவாதம் நடத்தப்பட வேண்டுமென்று இரண்டாவது பிளீனம் (1979) தீர்மானித்தது.
    ஆனால், மா.அ.குழுத் தலைமை இரண்டாவது பிளீனம் தீர்மானித்தவாறு உட்கட்சி விவாதத்தை நடத்தாமல், இடது சந்தர்ப்பவாதத்திற்கு எதிராக அறிக்கை வைத்த தோழர் கார்முகில் தலைமையிலான தோழர்களை கட்சியிலிருந்து வெளியேற்றியதன் மூலம் அமைப்பைப் பிளவுபடுத்தியது.  வெளியேற்றப்பட்ட தோழர்கள் தோழர் கார்முகில் தலைமையில், அவரைச் செயலராகக் கொண்டு 1981-ல் தற்காலிக அமைப்புக் குழுவையும், பின்னர் 1983-ல் மூன்றாவது பிளீனத்தைக் கூட்டி தமிழ்நாடு அமைப்புக் குழுவையும் அமைத்துச் செயல்பட்டனர்.
    தோழர் கார்முகில் மா.அ.குழுவில் இடது சந்தர்ப்பவாதத்திற்கு எதிராகவும், மா.லெ இயக்கத்தில் நிலவிய பல்வேறு இடது - வலது சந்தர்ப்பவாதப் போக்குகளுக்கு எதிராகவும் பல கட்டுரைகளையும் ஆவணங்களையும் வெளியிட்டார்.  1. முதலாளித்துவப் பாராளுமன்றமும் கம்யூனிஸ்டு புரட்சியாளர்களும் 2. சமுதாயத்தின் அடிப்படை மற்றும் முதன்மை முரண்பாடுகள் 3. தவறுகளுக்குத் தத்துவார்த்த முலாம் 4. திட்டம், மூலவுத்தி, செயலுத்தி என்றால் என்ன?  5. இரு பெரும் புரட்சிகளின் மாபெரும் படிப்பினைகள் 6. திரிபுவாதத்திற்கு எதிராக 7. பெரியார் தத்துவம் ஒரு மார்க்சிய விமர்சனம் 8. கட்சித்திட்டம் 9. அரசியல் தீர்மானம் 10. மார்க்சியம் வெல்லும் முதலானவை அவற்றில் குறிப்பிடத்தக்கவையாகும்.
    இந்த ஆவணங்கள் மூலம் அவர் மா.அ.குழுவின் இடது சந்தர்ப்பவாதத்திற்கு மட்டுமின்றி இ.பொ.க.(மப - லெ) இயக்கத்தில் நிலவிய இடது, வலது சந்தர்ப்பவாதப் போக்குகளுக்கும் முடிவு கட்டியதுடன், அதன் மூலம் முரண்பாடற்ற புரட்சிகர ம.தி.வழியையும் உருவாக்கினார்.
    மா.அ.குழுவிற்கு மாறாக பாசிச அபாயம் நிலவும் அரசியல் சூழலில் மூவகை அரசியல் போக்குகள் (பாசிசப் போக்கு, பாராளுமன்ற போலி சனநாயகப் போக்கு, புரட்சிகரப் போக்கு) நிலவுவதைச் சுட்டிக்காட்டி பாட்டாளிவர்க்கத் தலைமையில் புரட்சி இயக்கத்தைக் கட்டி அமைப்பதற்கு உகந்த வகையில் பாசிச எதிர்ப்பு தேசிய சனநாயகத் திட்டம் மற்றும் முன்னணி என்ற கொள்கையை கார்முகில் முன்வைத்தார்.  இத்திட்டம் சீனப்புரட்சியின் அனுபவங்களில் இருந்து கற்று முன்வைத்த குறிப்பான திட்டமாகும்.  இத்திட்டமும் அது பற்றிய கோட்பாடும் இந்திய (மா - லெ) இயக்கத்திற்குப் புதியதாகும்.  இ.பொ.க., இ.பொ.க.(மா), சத்தியநாராயணசிங் மற்றும் வி.மி.குழுவினரைக்காட்டி இடைக்காலப் புரட்சி அரசு பற்றிய எத்தகைய திட்டமும், முன்னணியும், முழக்கமும் திரிபுவாதத்திற்கே இட்டுச் செல்லும் என்று மா - லெ இயக்கத்தில் ஒரு பிரிவினர் கூறி வந்ததைப் பொய்ப்பித்ததாகும்.  அரசியல் இயக்கங்கள், முழக்கங்கள் இன்றி புரட்சி இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாது.  ஒவ்வொரு குறிப்பான சூழலிலும் அரசியல் போக்குகளைத் தொடர்ந்து ஆய்வு செய்து இவற்றை வகுத்து முன்வைக்க வேண்டும்.  குறிப்பான திட்டம் பற்றிய கோட்பாட்டு முடிவுகளும் அதன் அடிப்படையிலான பா.எ.தேசிய சனநாயகத் திட்டம் மற்றும் முன்னணி பற்றி அவர் முன்வைத்த தீர்மானமும் இப்பிரச்சினையை வெற்றிகரமாகத் தீர்ப்பதாக இருந்தன.
    முதலாளிய பாராளுமன்றமும் கம்யூனிஸ்டு புரட்சியாளர்களும் என்ற நூலின் மூலம் பாராளுமன்றவாதத்தை மட்டுமல்ல புறக்கணிப்பு வாதத்தையும் கோட்பாட்டு வகையில் கார்முகில் முறியடித்தார்.  இதன் மூலம் முதலாளியத் தேர்தல் காலங்களில் கட்சியின் நடைமுறையை மிகவும் ஆக்கப்பூர்வமாக அமைத்தார்.  பாராளுமன்றவாதிகளைப் போல் அதன்பால் ஒரு மாயையை உருவாக்குவதாகவோ, புறக்கணிப்புவாதிகளைப் போல் அதன்பால் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை உதாசீனப்படுத்துவதாகவோ கட்சியின் அணுகுமுறை அமையாது மக்கள் தங்களது சொந்த அனுபவங்களின் மூலமாகவே அந்த நிறுவனத்தையும், மக்களின் எதிரிகளையும் அடையானம் காணுகின்ற வகையில் பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல் காலங்களில் கட்சிப்பணிகள் அமையும்படி திட்டமிட்டு அமைத்தார்.  (உதாரணம்:1989 சனவரி சட்டமன்றத் தேர்தல், 1989 நவம்பர் பாராளுமன்றத் தேர்தல்) இதன் மூலம் தேர்தல் காலங்களில் புறக்கணிப்புவாதிகளைப் போல மக்களை வெறும் பார்வையாளர்களாக்காமல் புரட்சிகரமான முறையில் பங்கேற்பாளர்களாக கட்சி மாற்றியது.
    முதன்மை முரண்பாட்டைத் தீர்மானிக்க பொருளாதார அளவுகோல்களை முன்வைப்பதையும், அடிப்படை முரண்பாடுகளில் ஒன்றே முதன்மை முரண்பாடாகும் என்று கூறப்படுவதையும் கோட்பாட்டு வகையிலும் புரட்சிகர கட்சிகளின் வரலாற்றுச் சான்றுகளிலிருந்தும் மறுதலித்து சமுதாயத்தின் முதன்மை முரண்பாடு என்பத அரசியல் அரங்கில் அதிகாரத்தில் இருக்கும் வர்க்கங்களை இலக்காகக் கொண்டு தீர்மானிக்கப்படுவதாகும் என்பதை கார்முகில் நிறுவினார்.  இதன் காரணமாக கோட்பாட்டு வகையில் முரண்பாடின்றி அரசியல் அரங்கப்பணிகளை - பாசிச எதிர்ப்பு இயக்கம் மற்றும் முன்னணிக்கான பணிகளைக் கட்சி முன்னெடுத்துச் சென்றது.  முதன்மை மற்றும் அடிப்படை முரண்பாடுகள் பற்றி கோட்பாட்டு வகையில் கார்முகில் முன்வைத்த வரையறை இ.பொ.க.(மா.லெ) இயக்கத்திற்குப் புதியதாகும்.
    அதேபோல், அரசியல் - ஆயுதப் போராட்டங்களுக்கு இடையிலான உறவு குறித்த சந்தர்ப்பவாத விளக்கங்களுக்கும் கார்முகில் முடிவு கட்டினார்.  ஆயுதப் போராட்டம் நிகழ்ச்சி நிரலில் இல்லாத போது, அதற்கு இணையாகவும் அக்கம்பக்கமாகவும் அரசியல் போராட்டம் என்கிற சந்தர்ப்பவாத விளக்கங்களை நிராகரித்ததால் ஆயுதப் போராட்டம் என்கிற வாய் வீச்சு, அரசியல் போராட்ட முடமாக்கல் என்கிற பிரச்சினைகளிலிருந்து கட்சி விடுபட்டது.  இந்த முடிவு அரசியல் போராட்டங்களையும், இயக்கங்களையும் வீச்சுடன் முன்னெடுத்துச் செல்வதற்கு உதவியது.  கட்சியின் தலைமையில் பா.எ.இயக்கம் வீச்சுடன் முன்னெடுத்துச் செல்லப்பட்டது.
    அதுமட்டுமல்ல, பாராளுமன்ற அமைப்புக்கு மாற்றாக ஆயுதப்போராட்டத்தை முன்வைக்கும் இடது சந்தர்ப்பவாத பிரச்சார முறைக்கும் முடிவு கட்டினார்.  ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும் பாராளுமன்ற முறையல்ல, ஆயுதப் போராட்டமே தீர்வு என இடது சந்தர்ப்பவாதிகளால் முன்வைக்கப்படும் பிரச்சார முறைகளுக்குப் பதிலாக, பாராளுமன்ற முறைக்கு மாற்றாக சோவியத் ஆட்சி முறையே தீர்வு - பாராளுமன்ற சனநாயகம் போலி சனநாயகம், சோவியத் சனநாயகமே மக்கள் சனநாயகம் என்ற முழக்கத்தை மக்கள் மத்தியிலான பிரச்சாரத்தில் மையமாக்கினார்.  இதனால் தமிழகத்தில் சோவியத் சனநாயகம் பற்றிய பிரச்சாரத்தை வெகு விரிவாக முன்னெடுத்துச் சென்ற அமைப்பாக நமது கட்சி மட்டுமே திகழ்ந்தது என்பதை உறுதிபடக் கூற முடியும்.  சோவியத் சனநாயகம் பற்றிய அரசியல் மக்களிடம் சேர்க்கப்படும் முன் ஆயுதப்போராட்டம் பற்றிய பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்வது இடது தீவிரவாதமே என்பதில் கார்முகில் தெளிவுடன் இருந்தார்.
    மேலும், டெங் முன்வைத்த மூன்றுலகக் கோட்பாட்டை உலகப் புரட்சிக்கான மூலவுத்தி என்ற அளவுக்கு சந்தர்ப்பவாதிகள் உயர்த்தியதையும் கார்முகில் நிராகரித்தார்.  உலக அரசியல் சக்திகளை வகைப்படுத்தும் கோட்பாடு ஏகாதிபத்தியத்தை  பாட்டாளிவர்க்கம் முற்றாக வீழ்த்தி புரட்சியை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கு மேலும் மேலும் பலம் பெறுவதற்கான வாய்ப்புகளைக் கண்டறிந்து உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டதேயன்றி, அது உலகப் புரட்சிக்கான மூலவுத்தியை வகுப்பதன்று என்பதை நிறுவினார்.
    மேலும் சீனப்புரட்சியில் பின்பற்றப்பட்ட நீண்டகால மக்கள் யுத்தப்பாதை என்கிற புரட்சிக்கான மூலவுத்தி அனைத்து மூன்றாம் உலக நாடுகளுக்கும் பொருந்தக் கூடியது என்றும், அதுவே மாவோ சிந்தனையை அந்நாடுகளில் பொருத்துவதாகும் என்றும், மாவோ சிந்தனை பற்றிய கொச்சைப் படுத்தப்பட்ட இடது சந்தர்ப்பவாத விளக்கத்தையும் கார்முகில் நிராகரித்தார்.  மாவோ சிந்தனை என்பது சோசலிச நாடுகளில் முதலாளித்துவ மீட்சியும் அதற்கு எதிரான போராட்டமும் நடக்கும் காலகட்டத்திற்கான மார்க்சிய - லெனினியம் ஆகும் என்பதைத் தெளிவாக எடுத்து முன்வைத்தார்.
    மா.அ.குழுவின் இடது சந்தர்ப்பவாத நிலைப்பாடுகளுக்கு எதிரான போராட்டத்தில் த.நா.அ.கு.-வை உருவாக்கிய தோழர் கார்முகில், தனிச்சிறப்பு வாய்ந்த மேற்குறிப்பிட்ட அ.கோ.நிலைப்பாடுகள் காரணமாக முரணற்ற வகையில் புரட்சிகர ம.தி.வழியைச் செயல்படுத்தினார்.  மூன்றாவது பிளீனத்திற்குப் பின் (1983), நான்காவது (1986), ஐந்தாவது (1990), ஆறாவது (1992), பிளீனங்களை நடத்தினார்.  இக்காலத்தில் புரட்சிகர ம.தி.வழியைச் செயல்படுத்தியதன் காரணமாக விரல் விட்டு எண்ணத்தக்க சிலருடன் உருவான இந்த அமைப்பை, மிகக் குறுகிய காலத்திலேயே தமிழகத்தில் பல்லாயிரம் மக்களை அணி திரட்டி அரசியல் ஆற்றலாக எழுச்சியுறச் செய்தார்.

5. த.நா.மா.லெ.க.தோற்றம் (டிசம்பர் 1992)
    1980க்கு முன்பு மா.அ.கு.வில் நிகழ்ந்த உட்கட்சிப் போராட்டத்தில் அதன் இடது சந்தாப்பவாத நிலைப்பாடுகளுக்கு எதிராக சரியான மார்க்சிய நிலைப்பாடுகளை முன்வைத்துப் போராடிய தோழர் கார்முகில், அதன் தொடர்ச்சியாக த.அ.கு.வையும், பின்னர் த.நா.அ.கு.வையும் உருவாக்கியதுடன், கட்சியைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் ஊன்றிச் செயல்படச் செய்தார்.  பாசிச அபாயத்திற்கு எதிராகக் குறிப்பான திட்டம் ஒன்றை வைத்ததன் மூலம் திரிபுவாதத்திற்கும், வறட்டுவாதத்துக்கும் எதிராக மார்க்சியத்தைச் செயல்படுத்துவதிலும், மா.லெ. புரட்சிகர அரசியலையும் தத்துவத்தையும் தமிழகத்தில் பரப்புவதிலும் முன்னணியில் இருக்கச் செய்தார்.  நவீனத் திரிபுவாதிகளுக்கு எதிரான த்ததுவார்த்தப் போராட்டம் நடத்துவதிலும் மாசேதுங் சிந்தனையைப் பரப்புவதற்கான ஆவணங்களையும், நூல்களையும் அச்சிட்டு வெளியிடுவதிலும் முன்னணியில் இருக்கச் செய்தார்.  திரிபுவாதத்திற்கு எதிராகவும், மாவோ சிந்தனைக்கு ஆதரவாகவும் கருத்தரங்குகள், பேரணிகள், மாநாடுகள் என மககள் இயக்கங்களையும் சிறப்புடன் கட்டமைத்தார்.
    இதன் காரணமாக நமது கட்சி, பல்லாயிரக்கணக்கான மக்களை அணிதிரட்டி அரசியல் இயக்கங்களை நடத்துவதில் தமிழகத்தில் முன்னோடியாக மா - லெ அமைப்பாய் இருந்தது.  பாராளுமன்ற சனநாயகத்துக்கு எதிராக சோவியத் சனநாயகம் பற்றிய பரவலான பிரச்சாரத்தை எடுத்துச் சென்றதிலும் பாசிச அபாயத்திற்கு எதிராகப் பெருமளவுக்குப் பிரச்சாரங்களையும், இயக்கங்களையும் கட்டமைத்ததிலும் தமிழகத்தில் முன்னணியில் இருந்தது.  அரசியல் இயக்கங்களை மட்டுமின்றி ம.தி.அமைப்புகள் மூலம் 'மக்களின் ஒற்றுமை, நல்வாழ்வு, அரசியல் அதிகாரம்' என்கிற பணி முழக்க அடிப்படையில் மக்களின் பகுதி, பொருளாதார பிரச்சினைகளுக்கான இயக்கங்களையும் தொடர்ந்து குறிப்பிடத்தக்க அளவுக்குக் கட்டமைத்து பிரச்சாரம், கிளர்ச்சிகளையும் போராட்டங்களையும் நடத்தியது.  'தீண்டாமை மற்றும் சாதி ஆதிக்கத்திற்கு எதிராக', 'அதிகார வர்க்க அத்துமீறலுக்கு எதிராக', 'லஞ்ச ஊழலுக்கு எதிராக', 'சாராயம் மற்றும் போதைப் பொருள்களுக்கு எதிராக' என்கிற நான்கு முழக்கங்களின் கீழ் எண்ணற்ற மக்கள் இயக்கங்கள் கட்டி மக்கள் சன்தியை அணி திரட்டியது.  மக்கள் இயக்கங்கள் அனைத்தையும், தற்சார்பு, தன்மானம், சனநாயகம் என்கிற பண்பாட்டு இலக்குகளுடன் இணைத்து நடத்தியது.  அரசியல். பகுதி, பொருளாதார பிரச்சினைகளுக்கான இயக்கங்களில் தோழர்களும் அமைப்புகளும் எண்ணற்ற இடக்குமுறைகளைச் சந்தித்தார்கள். 1980 - 1990 வரையிலான பத்தாண்டுகளில் நீடித்து வந்த ஈழப் பிரச்சினையில் ஈழமக்களின் சனநாயகப் போராட்டங்களுக்கு ஆதரவாகவும், இந்திய விரிவாக்கத்திற்கு எதிராகவும் தொடர்ந்து பல வகைகளிலும் கட்சி செயல்பட்டு வந்தது.
    இவ்வாறு பத்தாண்டுகளுக்கும் மேலாக சித்தாந்தப் பணிகள், கட்சி அமைப்புப் பணிகள், அரசியல் பணிகள், ம.தி.இயக்கம் மற்றும் ம.தி.அமைப்புப் பணிகள் என அனைத்துத் துறைகளிலும் செய்த பணிகளின் மூலம் கார்முகில் கட்சியின் செயல்பரப்பைப் பல மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தினார்.  இந்நிலையில் மூன்றாவது பிளீனத்திற்குப்பின் மா - லெ இயக்கத்தின் அக, புற சூழல்களில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன.  சக ஏகாதிபத்தியம் முற்றிலும் வீழ்ச்சியடைந்து உலக அரசியல் சக்திகளில் மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தது.  சோசலிசக் கட்டுமானப் பிரச்சினைகள் குறித்து மேலும் தெளிவாகப் புரிந்துகொள்ள சோசலிச நாடுகளில் நடைபெற்ற வர்க்கப் போராட்டங்கள் பற்றிய பருண்மையான ஆய்வுகள் தேவைப்பட்டன.
    மார்க்சிய - லெனினிய இயக்கத்தின் பல்வேறு போக்குகளும் தொகுக்கப்ட்டு அய்க்கியத்திற்கான கொள்கையை அவற்றுக்கேற்ப வரைய வேண்டியிருந்தது.  1983ம் ஆண்டு அரசியல் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின் இந்திய  அரசியல் அரங்கில் ஏற்பட்ட மாற்றங்கள் பரிசீலிக்கப்பட்டு அரசியல் தீர்மானம் புதுப்பிக்கப்பட வேண்டியிருந்தது.  மேலும் கடந்த கால அமைப்புப் பணிகள் குறித்த அனுபவத்தொகுப்பொன்றும் மேற்கொள்ள வேண்டியிருந்தது.  இப்பரச்சினைகளைத் தீர்க்கும் முகமாக ஆறாவது பிளீனத்தை நடத்துவது என்றும் இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஆவணங்கள் தயாரிப்பு மற்றும் உட்கட்சி விவாதத்தை ஆறாவது பிளீனம் வரையிலுமான பிரதானப் பணியாக மேற்கொள்வதென்றும் கார்முகில் திட்டமிட்டார்.
    இ.பொ.க.(மா.லெ) இயக்க வரலாற்றில் மூவகைப் போக்குகள் இருப்பதையும், நமது அமைப்பு மூன்றாவது போக்கினைச் சரியான திசையில் முன்னெடுத்துச் சென்றிருப்பதையும் தொகுத்துக் கொண்டதுடன், சமூக ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சிக்குப்பின் உலக அரங்கில் மூவுலகக் கோட்பாடு முடிவுக்கு வந்துவிட்டதையும், உலக அரசியல் சக்திகளின் புதிய நிலைமைகளையும் தொகுத்து அதற்கேற்ப வகைப்படுத்தினார்.  சோசலிச நாடுகளின் வர்க்கப் போராட்ட அனுபவங்களைப் பருண்மையாக ஆய்வு செய்து முடிவுக்கு வருவது அவசியம் என்ற முடிவுக்கு வந்து அப்பணியை பிளீனத்திற்குப் பின்பு நிகழ்ச்சிப் போக்கில் விரிந்த ஆய்வுகள், விவாதங்கள் மூலம் மேற்கொள்வதென்றும் முடிவு செய்தார்.  1983 அரசியல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபின், இந்திய அரசயில் அரங்கில் ஏற்பட்ட நிகழ்வுகள், மாற்றங்கள் குறித்த பரிசீலனையில் சாதி, மதம் மற்றும் இனப் பிரச்சினைகள் தொடர்ந்து எரியும் பிரச்சினைகளாக இருந்து வருவதையும், மண்டல், பாபர்மசூதி, பஞ்சாப், காஷ்மீர், அசாம் போன்ற பிரச்சினைகள் வடிவில் அவை தீவிரமாக வெளிப்பட்டு வருவதையும் கவனத்தில் கொண்டார்.
    அரசியல் அரங்கில் சுற்றிச் சுற்றி வரும் இப்பிரச்சினைகள் குறுகிய காலத்தில் எழுந்த தற்காலிகப் பிரச்சினைகளாக இல்லை என்பதையும், தொடர்ந்து அரசியல் - சமுதாய வாழ்வில் சுடர்விட்டு எரியும் பிரச்சினைகளாக இருந்து வந்துள்ளன என்பதையும், இப்பிரச்சினைகளில் சந்தர்ப்பவாத நிலைப்பாடுகளை மேற்கொள்ளும் ஆளும் வர்க்கக் கட்சிகள் தொடர்ந்து 'தேசிய ஒருமைப்பாடு' பற்றி இடைவிடாது கூச்சலிட்டு வருவதையும் கவனத்தில் கொண்டார்.
    மேலும், இம்மூன்று பிரச்சினைகளுக்கும் வர்க்கப் போராட்டத்துக்கும் உள்ள தொடர்பு அறியப்படாவிட்டால் வர்க்கப் போராட்டத்திற்கு வெற்றிகரமாகத் தலைமை ஏற்கும் அரசியல் தீர்மானம் ஒன்றை உருவாக்க முடியாது என்பதையும் உணர்ந்தார்.
    கடந்த காலத்தில் இப்பிரச்சினைக்ள எழுந்தபோதெல்லாம் முதலாளித்துவ அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகளை எதிர்ப்பது அல்லது விமர்சிப்பது என்ற நிலைப்பாட்டையே கட்சி மேற்கொண்டு வந்திருக்கிறது.  உண்மையில் இப்பிரச்சினைகளுக்கும், வர்க்கப் போராட்டத்திற்கும் உள்ள தொடர்பைக் கட்சி வரலாற்றுப் பூர்வமாக ஆய்வு செய்து அறிந்து கொண்டிருக்கவில்லை.  கட்சித் திட்டமும், அரசியல் தீர்மானமும் காலனிய காலத்திலிருந்து மட்டுமே சமூக ஆய்வுகளைக் கொண்டிருந்தன.  ஆனால் இப்பிரச்சினைகளோ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட இந்திய வரலாற்றுடன் இணைந்துள்ளன.  எனவே இப்பிரச்சினைகளின்பால் கட்சி ஓர் அழுத்தமான செல்வாக்கைச் செலுத்த வேண்டுமானால், இப்பிரச்சினைகளுக்கும் வர்க்கப் போராட்டத்துக்கும் உள்ள வரலாற்றுப் பூர்வமான தொடர்பை ஆய்வு செய்து கண்டறிவது அவசியம் என்றும் அதன் அடிப்படையில் அரசியல் தீர்மானம் வரையப்பட வேண்டும் என்றும் முடிவுக்கு வந்தார்.
    இந்திய வராலாறு - வர்க்கப் போராட்டம் பற்றிய ஆய்வு, புதிய கண்ணோட்டத்தையும் முடிவுகளையும் தருவதாக அமைந்தது.  இந்திய வரலாற்றில் இன ஒடுக்குமுறையும், சாதி ஒடுக்குமுறையும் இந்துப் பார்பனியத்திலிருந்து பிரிக்க முடியாதது.  இந்திய ஆளும் வர்க்கங்களின் இந்தியத் தேசியத்தில் இருப்பது இந்துப் பார்ப்பனியமே;  எனவே புதிய சனநாயகப்புரட்சி என்பது ஏகாதிபத்திய எதிர்ப்பு - நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு மட்டுமல்ல, இந்தியத் தேசியம் என்ற தரகு முதலாளித்துவ - பார்ப்பனியத் 'தேசிய' கண்ணோட்டத்தையும் எதிர்த்ததாகும் என்ற முடிவுக்கு வந்தார்.  இந்தத் தரகு முதலாளித்துவப் பார்ப்பனியத் தேசியம் என்பது தரகு முதலாளிய - பார்ப்பனிய ஏகாதிபத்தியம் என்பதன்றி வேறல்ல.
    இது தேசியப் பிரச்சினைக்கும், சனநாயகப் புரட்சிக்கும் இடையிலான உறவு குறித்த ஆய்வைத் தூண்டியது.  ஆய்வின் முடிவில் சனநாயகப் புரட்சி என்பது தேசிய உருவாக்கத்திலிருந்து பிரிக்க முடியாதது என்ற லெனினியக் கொள்கையைச் சரியாகக் கிரகித்துக் கொண்டதுடன், ஒரு பல்தேசிய இன அரசில் ஒடுக்கும் தேசிய இனத்தின் பாட்டாளி வர்க்கம் புரட்சிக்குத் தலைமை தாங்கும் சக்தியாக வளர்ந்திருந்தாலன்றி அங்கு ஒன்றுபட்ட கட்சியோ, ஒட்டுமொத்தப் புரட்சியோ சாத்தியம் இல்லை என்பதையும் சரியாகக் கிரகித்துக்கொண்டார்.
    இந்தியாவில் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பார்ப்பனியம் உழைக்கும் மக்களையும், அவர்தம் மொழிகளையும் சூத்திரர், சூத்திரபாசை என இழிந்துரைத்து ஒடுக்கி வந்திருக்கிறது.  இன்றும் இந்தியத் தேசிய ஒருமை என்ற பெயரில் சமக்கிருத மயமாக்கப்பட்ட இந்தியின் மூலம் தேசிய மொழிகள் - மக்கள் மொழிகள் ஒடுக்கப்படுகின்றன.  தேசிய இன மக்களின் சுய நிர்ணய - சனநாயக உரிமை பறிக்கப்பட்டுள்ளது.  இந்தியத் தேசியம் என்ற தரகுமுதலாளிய - பார்ப்பனிய தேசியம் பல்வேறு தேசிய இனங்களையும் தேசங்களாக வளரவிடாமல் ஒடுக்கும் ஒருவகை ஏகாதிபத்தியமாக இருக்கிறது.  ஆனால் இந்தியாவில் சனநாயகப் புரட்சி என்பது இத்தேசிய இனங்கள் முழுத்தேசங்களாக உருவாவதன் ஊடாக மட்டுமே வெற்றிபெற முடியும்.  அதிலிருந்து பிரிக்க முடியாது.  இவ்வாறு இந்திய வரலாற்றில் சனநாயகப் புரட்சியிலிருந்து பிரிக்க முடியாதபடி இரண்டு போக்குகள் உள்ளன.
    முதலாவது, இந்தியத் தேசியம், இந்தியத் தேசிய ஒருமைப்பாடு என்ற பெயரில் உள்ள ஏகாதிபத்தியப் போக்கு.  இது பல்வேறு தேசிய இன மக்களையும், அவர்தம் சனநாயக இயக்கங்களையும் ஒடுக்கிப் பாசிசப் போக்கு.  இரண்டாவது, பல்வேறு மொழி பேசும் மக்களும் முழுமையாக தேசிய இனங்களாகவும், தேசங்களாகவும் வளர்ச்சியடைந்து வரும் சனநாயகப் போக்கு.  முதல் போக்குடன் அந்நிய ஏகாதிபத்தியவாதிகள் மற்றும் தரகு முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின் நலனும்; இரண்டாவது போக்குடன் தொழிலாளிகள், விவசாயிகள் மற்றும் அனைத்துப் புரட்சிகர வர்க்கங்களின் நலனும் பிணைக்கப் பட்டிருக்கிறது.  பாட்டாளி வர்க்கம்  இந்த உண்மையைப் புறக்கணித்துவிட்டு அதாவது இரண்டாவது போக்குடன் தன்னை அய்க்கியப்படுத்திக் கொள்ளாமல் சனநாயகப் புரட்சியை வெற்றிகரமாக நடத்தி முடிக்க முடியாது.
    இங்கு பல்வேறு தேசிய இனங்களுக்கும் ஒரே கட்சி, ஒட்டுமொத்தப் புரட்சி என்ற இரசியப் புரட்சியின் உதாரணத்தை அப்படியே பயன்படுத்த முடியாது.  காரணம், இந்தியாவில் ஒடுக்கும் தேசிய இனமே இல்லை என்பதால் அதில், வளர்ச்சி பெற்ற புரட்சிக்குத் தலைமை தாங்குகிற பாட்டாளி வர்க்க இயக்கம் தோன்றுவது, அதோடு ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் பாட்டாளி வர்க்க இயக்கம் ஒன்றுபட்டு ஒரே கட்சியாக ஒட்டுமொத்தப் புரட்சியை நட்த்துவது என்ற பிரச்சினைகளுக்கே இடமில்லை.  இங்கு ஒவ்வொரு தேசிய இனமும் தத்தம் சொந்தப் பாட்டாளி வர்க்கக் கட்சியின் தலைமையிலான தேசிய விடுதலைப் புரட்சியின் மூலமே சனநாயகப் புரட்சியை நிறைவு செய்யமுடியும்.  இதற்கு மாற்று எதுவும் இல்லை.  இது ஏகாதிபத்தியத்திற்கும் நிலப்பிரபுத்துவத்திற்கும் மட்டுமல்ல, இந்தியத் தரகு மதலாளிய - பார்ப்பனிய ஏகாதிபத்தியத்திற்கும் எதிரானதாகும்.
    தேசிய பிரச்சினையில் கட்சியின் கடந்தகால நிலைகளையும் தோழர் கார்முகில் பரிசீலனைக்கு உட்படுத்தினார்.  இந்தியத் தேசம் என்ற கருத்தோட்டத்தின் அடிப்படையிலேயே கட்சி கடந்த காலத்தில் சனநாயகப் புரட்சிக்கான திட்டத்தை வகுத்துக் கொண்டிருந்தது.  ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு இந்திய சனநாயகப் புரட்சி அதன் இலக்காயிருந்தது.  ஆனால் தேசிய உருவாக்கத்துடன் இணைக்கப்படாத, அதிலிருந்து பிரிந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலபிரபுத்துவ எதிர்ப்பு, இந்திய சனநாயகப் புரட்சி என்ற கட்சியின் இந்த நிலைப்பாடு ஏகாதிபத்தியப் பொருளாதாரவாதமே.  கட்சி 1942-43ல் தான் இந்தியாவில் பல்வேறு தேசிய இனங்கள் இருப்பதையும் தேசிய இனங்கள், தேச உருவாக்கம் பற்றிய ஸ்டாலின் கோட்பாடுகள் ஆகியவற்றையும் அறிந்தது.
    அதன்பின்பும் கட்சியின் ஏகாதிபத்தியப் பொருளாதாரவாதத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.  விளைவு கட்சியின் பிளவுக்குப் பின் இ.பொ.க., இ.பொ.க.(மா). ஆகிய இரு  கட்சிகளுமே தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமையையே எதிர்க்கும் தரகு முதலாளிய - பார்ப்பனிய ஏகாதிபத்தியத்தின் - இந்தியத் தேசியத்தின் பாதுகாவலர்களாக, பிற்போக்கு ஆளும் வர்க்கக் கட்சிகளாகச் சீரழிந்தன.  மா - லெ கட்சி, ஆளும் வர்க்கங்கள் பற்றி எடுத்த நிலைப்பாடு, அது; தரகு முதலாளிய - பார்ப்பனியப் பிற்போக்கில் சீரழியாமல் தடுத்ததெனினும் ஏகாதிபத்தியப் பொருளாதாரத்திலிருந்து மீட்கவில்லை.  இப்பொருளாதாரவாதம் கட்சியை தேசிய சூனியவாதக் கட்சியாக இதன் காரணமாகத் தத்துவ வறட்சிக்கும், வறட்டுவாதத்துக்கும், அனுபவவாதத்துக்கும் பலியான கட்சியாக மாற்றிவிட்டது.  நமது கட்சியும் இதிலிருந்து தப்பவில்லை.
    இதனால் இப்பொருளாதாவாதக் கண்ணோட்டத்தைக் களவைதும், தேசிய இன வட்டகை அடிப்படையில் கட்சியைக் கட்டி தேசிய விடுதலைப் புரட்சி மூலம் சனநாயகப் புரட்சியை முன்னெடுத்து்ச செல்வதுமே மார்க்சிய - லெனினியப் புரட்சி இயக்கத்தில் நிலவும் தேக்க நிலையை உடைத்து முன்னேற ஒரே வழியாகும் என்றும் கார்முகில் முடிவுக்கு வந்தார்.
    இம்முடிவுகள் அனைத்தும் இந்தியா ஓர் அரைக்காலனி - அரைநிலப்பிரபுத்துவ நாடு என்ற இ.பொ.க.(மா - லெ)யின் வரையறையை மாற்றி தரகு முதலாளிய - பார்ப்பனிய ஏகாதிபத்தியம் என வரையறுக்கும்படி கோரும் முடிவுகளாகும்.  தோழர் கார்முகில் வந்தடைந்த முடிவுகள் கட்சியின் அடிப்படை நிலைப்பாடுகளிலேயே மாற்றத்தைக் கொண்டுவரக் கூடியவை என்பதால் அவற்றை அறிக்கையாகத் தொகுத்து உட்கட்சி விவாதத்துக்காக மார்ச் 1992ல் அணிகளுக்குச் சுற்றுக்கு விட்டார்.  அதைத் தொடர்ந்து மேலும் விளக்கும் முகமாக மூன்று அறிக்கைகளை அடுத்தடுத்து சுற்றுக்கு விட்டு, எட்டு மாதங்களாக நடைபெற்ற உட்கட்சி விவாதத்திற்குப்பின் ஏகாதிபத்தியப் பொருளாதாரவாதத்துக்கும், தேசியச் சூனியவாதத்துக்கும் 1992 டிசம்பரில் நடைபெற்ற ஆறாவது பிளீனத்தில் முடிவுகட்டி த.நா.மா.லெ.க.வை அமைத்தார்.  த.நா.அ.கு.வின் ஆறாவது பிளீனம் த.நா.மா.லெ.க.வின் முதல் மாநாடாகவும் அமைந்தது.  தோழர் கார்முகில் பொதுச் செயலாளராக மாநாட்டில் தேர்வு செய்யப்பட்டார்.
    இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் தோற்றம், இந்தியப் புரட்சி இயக்கத்தின் த்ததுவமாக மார்க்சிய - லெனினியத்தைப் பிரகடனப்படுத்தியது.  அதிலிருந்து தோன்றிய இ.பொ.க.(மா.லெ) இந்தியப் பெருமுதலாளிகளைத் தரகு முதலாளிகள் என் வரையறுத்ததன் மூலம் இந்திய ஆளும் வர்க்கங்களுடன் சமரசமற்ற புரட்சிப் போரைப் பிரகடனப்படுத்தியது.  த.நா.அ.கு.வின் மூன்றாவது பிளீனம் இ.பொ.இயக்கத்தின் இடது - வலது திரிபுகளுக்கு முடிவு கட்டியது.  அதன் ஆறாவது பிளீனம் இந்தியாவை தரகு முதலாளிய - பார்ப்பனிய ஏகாதிபத்தியம் எனச் சரியாக வரையறுத்ததன் மூலம் இ.பொ.இயக்கத்தின் பொதுப் பண்பாயிருக்கும் ஏகாதிபத்தியப் பொருளாதாரவாதத்துக்கும் தேசியச் சூனிய வாதத்திற்கும் முடிவுகட்டி ஒரு சரியான மார்க்சிய - லெனினிய கட்சியைக் கட்டுவதற்குச் சரியான அடிப்படையை நிறுவி இருக்கிறது.
    மார்க்சிய - லெனினியத்தை தனது தத்துவமாகப் பிரகடனப்படுத்திக்கொண்டு தோன்றிய இந்தியப் பொதுவுடைமை இயக்கம் ஒரு முழுமையான காலனி நாட்டில் தோன்றியது.  அது தோன்றும்போது இங்கு எண்ணற்ற தேசிய இனங்கள் இருப்பினும் அவை விழிப்பற்ற தேசிய இனங்களாக இல்லை.  காலனி ஆதிக்கவாதிகள் தமது நிர்வாக எல்லைகளைக் கூட தேசிய இனவட்டகை அடிப்படையில் அமைத்துக் கொண்டிருக்கிவில்லை.  சமசுதானங்களும், காலனி ஆதிக்கவாதிகளின் நிர்வாகமும் தேசிய இனவட்டகை எல்லைகளை ஒரு பொருட்டாகவே கருதவில்லை.  தேசிய இனங்கள் கூறுபோடப்பட்டும், தேசிய இனங்கள் இணைக்கப்பட்டும் நிர்வாக எல்லைகள் அமைக்கப்பட்டிருந்தன.  காலனிய காலத்துக்கு முன்பும் இந்தியாவில் பன்னூறு ஆண்டுகளாக இந்த நிலைதான் நீடித்து வந்தது.
    மேலும் இங்கு பொதுவுடைமை இயக்கம் தோன்றுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே இந்து மதவாதத்தை அடிப்படையாகக் கொண்டு 'இந்திய தேசிய' இயக்கம் - காங்கிரஸ் இயக்கம் தோன்றி விட்டது.  மொழித் தேசிய இயக்கங்கள் இன்மையும் 'இந்திய தேசிய' இயக்கம் ஏற்கனவே தோன்றியிருந்ததும் கம்யூனிஸ்டு கட்சி தங்கள் தோற்றத்திலேயே இந்திய தேசிய நோயால் பீடிக்கபடுவதற்கு காரணங்கள் ஆகிவிட்டன.  மேலும் இந்தியாவிலும் உலக அளவிலும் புரட்சி இயக்கத்தின் முதன்மையாக எதிரியாய் ஏகாதிபத்தியம் இருந்த காலகட்டத்தில் கட்சி தோன்றியதால் இயல்பாகவே இந்திய தேசியம் என்பதற்கு மொழி முதலான இனக்கூறு பொதுப்பண்பு இல்லாத ஏகாதிபத்திய எதிர்ப்பு இந்திய தேசியம் என்று அது மார்க்சிய - லெனினியத்திற்கு விரோமான ஏகாதிபத்தியப் பொருளாதாரவாத விளக்கமளித்துக் கொண்டது.
    தேசிய இனங்களின் தேசிய உணர்வு விழிப்பற்றிராத காலமாக இருந்ததால் கட்சி தோன்றி வளர்ந்தது கூட தேசிய இனப் பிரதேச அடிப்படையில் அமையவில்லை.  (ஆனால் இரசியாவில் கட்சி தேசிய அனப் பிரதேச அடிப்படையில் தோன்றி வளர்ந்து பின்னர் இணைந்தன.  நிர்வாகப் பிரதேசங்கள் தேசிய இன அடிப்படையில் அமைந்திருந்தன என்ற அளவுக்கு தேசிய விழிப்புணர்வு கொண்ட தேசிய இனங்களாக அவை இருந்தன).  இங்கு பல பெரும் நகரங்களிலேயே முதலில் கட்சிக் குழுக்கள் தோன்றி பின்னர் இந்திய அளவிலானதாக இணைந்தன.  இவ்வாறு இவை தோற்றத்திலேயே தேசிய இன அடித்தளமற்றவையாகவே இருந்ததும், ஏகாதிபத்திய எதிர்ப்பு இந்தியத் தேசியம் என்ற பொருளாதாரவாதத்துக்கு ஒரு காரணமாகும்.
    1930-40களில் பல்வேறு தேசிய இனங்களும் விழிப்பற்று தேசிய இன அடிப்படையிலான கோரிக்கைகளையும், முசுலீம்கள் மத அடிப்படையில் பாகிஸ்தான் கோரிக்கையையும் முன்வைக்கத் தொடங்கிய பின்தான் கட்சி தேசிய இனம், தேசம் பற்றிய மாக்க்சியக் கருத்தியலை முதன் முறையாக உணர்ந்தது.  எனினும் அப்போதும் அது ஏகாதிபத்திய எதிர்ப்பு இந்தியத் தேசியம் என்ற ஏகாதிபத்தியப் பொருளாதாரவாதக் கருத்திலிருந்து விடுபடவில்லை.  இதனால் இந்தியத் தேசிய அய்க்கியத்தைப் பாகதுகாப்பதற்கு ஒரு செயலுத்தி என்ற முறையில் கட்சித் திட்டத்தில் தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரிப்பது, மொழிவழி மாநிலக் கோரிக்கைகளுக்கான போராட்டத்தை ஆதரிப்பது என்பதுடன் நிறுத்திக் கொண்டது.
    நாட்டின் பல பகுதிகளிலும் மொழிவழி மாநில அமைப்புகள் அமைக்கப்பட்ட பின் தேசிய விடுதலைப் போரிக்கைகள் எழத் தொடங்கியதை அடுத்து இ.பொ.க.(மா) ஆகிய இரு கட்சிகளும் இந்தியத் தேசிய ஒற்றுமையைப் பாதுகாப்பது என்ற பெயரில் தேசிய இனங்களின் சுயநிர்ணய எரிமையையே கட்சித் திட்டத்திலிருந்து நீக்கிவி்ட்டன.  முற்றிலும் திரிபுவாத, பாராளுமன்றவாத ஆளும் வர்க்கக் கட்சிகளாக அப்பட்டமாக வெளிப்படுத்திக் கொண்டன.  இந்நிலையில் தோன்றிய இ.பொ.க.(மா - லெ) இந்தியப் பெரும் முதலாளிகளைத் தரகு முதலாளிகள் என்று தீர்மானித்தது.  ஆயுதப் போராட்டப் பாதையைப் பிரகடனப்படுத்தியதன் மூலம் மார்க்சிய - லெனினியத்தை உயர்த்தி பிடித்தது.  ஆனால் ம.தி.அமைப்பு - இயக்கம் புறக்கணிப்பு, தனிநபர் அழித்தொழிப்பு போன்ற அதன் இடது தீவிரவாத சறுக்கல் அதில் கடுமையான நெருக்கடிகள் தோன்றுவதற்கு காரணமாகிவிட்டது.  மேலும் இடது தீவிரவாதத்திலிருந்து விடுபடுபதற்கான போராட்டமே அதில் பிரதானமாகிவிட்டது.
    இ.பொ.க.(மா - லெ)க்குள் அதன் இடது தீவிரவாதப் போக்குகளை எதிர்த்து நடந்த போராட்டத்தில் அனைத்து இடது - வலது திரிபுகளையும் களைந்த அ.கோ.நிலைப்பாடுகளுடன் தோன்றியது த.நா.அ.கு எனினும் த.நா.அ.கு.வின் நிலைப்பாடுகளும் புரட்சி இயக்கத்தின் தேவைகளை நிறைவு செய்வனவாக இல்லை.
    புறநிலையில் எழுந்துவரும் தேசிய இனப் போராட்டங்களும், மத, சாதிப் பிரச்சினைகளும் த.நா.அ.கு.வின் அ.கோ.நிலைப்பாடுகளுக்கு உட்பட்டனவாக இல்லை.  காரணம் த.நா.அ.கு.வின் அ.கோ.நிலைப்பாடுகளும் இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் ஏகாதிபத்தியப் பொருளாதாரவாத எல்லைக்குள் அமைந்து விட்டதுதான்.
    இந்திப் பொதுவுடைமை இயக்கம், அதன் பிரதானப் பலவீனமாக ஏகாதிபத்தியப் பொருளாதாரவாதம் இருந்தபோதிலும் தனது தத்துவ ஆயுதமாக மார்க்சிய - லெனினியத்தைப் பிரகடனப்படுத்தியது  அதன் பலமான அம்சமாகும்.  இ.பொ.க.(மா) திரிபுவாதத்தில் விழுந்து ஆளும் வர்க்கக் கட்சிகளாக அப்பட்டமாக வெளிப்படுத்திக் கொண்டபோது அவற்றின் திரிபுவாதத்திற்கு எதிரான தத்துவார்த்தப் போராட்டத்தில் இ.பொ.க.(மா - லெ) தோன்றுவதற்கு இந்தப் பலமான அம்சமே காரணமாகும்.  அதன் பிரதான பலவீனமாக இடது தீவிரவாதம் இருந்தபோதிலும் திரிபுவாதத்திற்கு எதிராகப் புரட்சிகர நிலைப்பாடுகளை அது உயர்த்திப் பிடித்தது.
    இதன் தொடர்ச்சியாக இ.பொ.க.(மா.லெ)யில் இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் இடது, வலது திரிபுகளுக்கு எதிரான தத்துவார்த்தப் போராட்டத்தில் த.நா.அ.கு. தோன்றியது.  இ.பொ.க.(மா - லெ) இயக்கத்தில் நிலவிய மூவகைப் போக்குகளில் மூன்றாவது போக்கை மிகச் சரியாக முன்னெடுத்துச் செல்வதில் த.நா.அ.கு. முன்னின்றது.  இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் பொதுப் பண்பாக இருக்கும் ஏகாதிபத்தியப் பொருளாதாரவாதம் த.நா.அ.கு.விலும் தொடர்ந்தது அதன் பலவீனமெனினும், இடது - வலது திரிபுகளுக்கு எதிரான தத்துவப் போராட்டத்தில் சரியான அ.கோ.நிலைப்பாடுகளை மேற்கொண்டதும், இ.பொ.க.(மா - லெ) யின் மூன்றாவது போக்கை மிகச் சரியாக முன்னெடுத்துச் சென்றதும், அரசியல் மற்றும் தத்துவார்த்தப் பணிகளுக்கான முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தும் அதன் பலமான அம்சங்களாகும்.
    இந்தப் பலமான அம்சங்களே இ.பொ.இயக்கத்தின் பொதுப் பண்பான ஏகாதிபத்தியப் பொருளாதாரவாதத்தையும் கண்டறிந்து அதற்கெதிரான தத்துவார்த்தப் போராட்டத்தில் இன்று சரியான நிலைப்பாடுகளை - இந்தியா ஒரு தரகு முதலாளிய - பார்ப்பனிய ஏகாதிபத்தியம் என்ற வரையறுப்பு, தமிழ்நாடு விடுதலைப் புரட்சி, தமிழ்நாட்டுக்குத் தனிக் கட்சி என்ற நிலைப்பாடுகளை த.நா.அ.கு. வந்தடைவதற்கும் காரணமாகும்.  சுருங்கக் கூறின் இ.பொ.இயக்கம் மார்க்சிய - லெனினியத்தைத் தனது தத்துவ ஆயுதமாகப் பிரகடனப் படுத்தியிருந்து சரியான அம்சமே இ.பொ.க., இ.பொ.க.(மா) வின் திரிபுவாத நிலைப்பாடுகளுக்கு எதிராக இ.பொ.க.(மா - லெ) தோன்றுவதற்கும், இ.பொ.க.(மா.லெ)யின் சரியான அம்சங்களே இ.பொ.இயக்கத்தின் இடது, வலது திரிபுகளுக்கு எதிராக த.நா.அ.கு தோன்றுவதற்கும், அவற்றின் தொடர்ச்சியாக அமைந்த த.நா.அ.கு. வின் சரியான அம்சங்களே இன்றைய சரியான நிலைப்பாடுகளுடன் த.நா.மா.லெ.க. தோன்றுவதற்கும் காரணங்களாக அமைந்தன.
    எனவே த.நா.அ.கு. இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் ஏகாதிபத்தியப் பொருளாதாரவாத்ததைக் கண்டறிந்து சரியான நிலைப்பாடுகளை வந்தடைந்தது.  இ.பொ.இயக்க வரலாற்று வளர்ச்சியில் ஒரு கட்டம் தீர்க்கமான கட்டம் என்ற வகையிலேயேயாகும்.  இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தில் நிலவிய இரு அம்சங்களில் (பலம் -பலவீனமான அம்சங்கள்)  பலமான அம்சத்தின் தொடர்ச்சியாய் மார்க்சிய - லெனினியத் தத்துவப் போராட்டத்தை உயர்த்திப் பிடித்ததாலேயே த.நா.அ.கு. இந்தச் சரியான முடிவுக்கு இன்று வர முடிந்தது.  த.நா.அ.கு. விற்குள்ளும் பலவீனமான அம்சங்கள் தொடர்ந்து நிலவிய போதிலும் அதிலி நிலவிய பலமான அம்சத்தின் வெற்றியே த.நா.மா.லெ.க.வின் தோற்றமாகும்.
    த.நா.அ.கு. இம்முடிவுகளுக்கு வரும் முன்னரே தமிழகத்தில் தமிழக விடுதலை, தமிழ்நாட்டிற்குத் தனிக் கட்சி என்ற நிலைப்பாடுகளைச் சிலர் மேற்கொண்டிருந்தார்கள்.  ஆனால் இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் பொதுபபண்பாயிருக்கும் ஏகாதிபத்தியப் பொருளாதாவாதத்தைக் கண்டறிந்து அதற்கெதிரான த்ததுவார்த்தப் போராட்டத்தில் அவர்கள் இந்த நிலைப்பாடுகளை வந்தடையவில்லை.  நக்சல்பாரி உழவர் எழுச்சியை அடுத்து, அனைத்திந்திய அளவில் பொதுவுடைமைப் புரட்சியாளர்களின் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டபோது அதன் தலைமையை நிராகரித்துத் தமிழகத்தில் பொதுவுடைமைப் புரட்சியாளர்கள் சிலர் 1969ல் தமிழ்நாட்டிற்குத் தனிக் கட்சி, தமிழக விடுதலைப் புரட்சி என்ற நிலைப்பாடுகளுடன் ஒரு தற்காலிக மத்தியக் குழு அமைத்துத் தமிழகப் பொதுவுடைமைக் கட்சி அமைக்கும் தீர்மானத்தை மேற்கொண்டிருக்கிறார்கள்.
    ஆனால் அவர்கள் தொடர்ந்த எவ்விதச் செயல்பாடுமின்றி கலைந்துவிட்டார்கள்.  அடுத்து 1980களின் மத்தியில் இந்நிலைப்பாடுகளை தோழர், தமிழரசன் மேற்கொண்டார்.  தோழர்.தமிழரசன் இ.பொ.க.(மா.லெ)யின் இடது தீவிரவாதப் போக்குகளை முற்றாகக் களையாமல் அதன் தொடர்ச்சியாகவே இந்நிலைப்பாடுகளை மேற்கொண்டு தீவிர நடைமுறைகளில் ஈடுபட்டார்.  அவர் தனது நிலைப்பாடுகளுக்கு குறிப்பாக தமிழ்நாட்டுக்கு ஏன் தனி ஒரு கட்சி வேண்டும் என்பதற்குத் தத்துவார்த்த விளக்கம் ஏதும் அளித்திருப்பதாகத் தெரியவில்லை.  அவரைப் பொருத்தவரை த்ததுவார்த்தப்பணிகளைப் புறக்கணித்த இடது தீவிரவாதியாகவே இருந்தார்.  வேறு சிலரும் இந்நிலைப்பாடுகளை முன்வைத்திருக்கிறார்கள் எனினும் எவரும் அவற்றுக்கு மார்க்சிய - லெனினிய அடிப்படையில் சரியான தத்துவ விளக்கம் அளிப்பவராகவோ அவற்றைச் செயல்படுத்தும் இயக்க, அமைப்பு, நடைமுறை கொண்டவராகவோ இல்லை.
    இத்தகைய குறைபாடுகள் நீங்கிய ஓர் அமைப்பாக தமிழகத்தில் த.நா.ம.லெ.க. உதயமாகி இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக